இந்தியாவிலேயே டாப்.. தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சி! மத்திய அரசின் டேட்டாவால் முதல்வர் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள 2024-25 ஆம் ஆண்டின் மாநில வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

TN Achieved Highest Growth Rate in India On Path to 1 Trillion Economy CM Stalin

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழகம் இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி சாதனை படைத்து உள்ளோம்.

ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர், பொருளாதார இலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம். நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கை கொண்டு மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் படி, 2023 - 2024 நிதியாண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தி, 2024 -25ல் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில், 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 9.69 விழுக்காடு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கையில், 8 விழுக்காட்டிற்கு மேல் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 9.69 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதில், அதிகபட்சமாக சேவைகள் துறை, 12.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், குறைந்தபட்சமாக, விவசாயம் மற்றும் கால்நடைகள் துறை 0.15 விழுக்காடு மட்டுமே அதிகரித்திருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், நாட்டிலேயே தமிழ்நாடு தான் உண்மையான பொருளாதார வளர்ச்சியில் முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டைத் தொடர்ந்து, 8.21 சதவிகித வளர்ச்சியுடன் 2 ஆவது இடத்தில் ஆந்திராவும், 7.82 விழுக்காடு வளர்ச்சியுடன் ராஜஸ்தான் 3 ஆவது இடத்திலும் உள்ளன.

மேலும், இதே வளர்ச்சி தொடர்ந்தால், 2033 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக மாறும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+