Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால் வார்ப்பாரா பன்னீர்செல்வம்? வெசனத்தோடு காத்திருக்கும் விவசாயிகள்.! இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் கரும்பு நெல்லுக்கு அதிக தொகை, விவசாயிகள் உயிரிழந்தால் இழப்பீடு, கூட்டுறவு வங்கிகளில் கடன் உயர்வு ஆகிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

tamil nadu budget 2025 Agriculture mrk panneerselvam 2025

சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக மகளிர் நலன், நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், பள்ளிக்கல்வி, உயர்கல்வி தொடர்பான பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. மேலும், அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 15 நாள் விடுப்பு சரண், எதிர்பாரா விபத்தில் உயரிழந்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் 2025 2026ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டசபையில் தாக்கல் செய்கிறார் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். காலை ஒன்பதரை மணிக்கு அவர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் அவரது பட்ஜெட் உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து வேளாண் துறைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஐந்தாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். அதற்கு பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்படும். தொடர்ந்து 17ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத் தொடர் நடைபெறும் எனவும், 21ஆம் தேதி வரை மானியக் கோரிக்கை விவாதமும் துறை சார்ந்த அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும்.

தொடர்ந்து 24-ம் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. அதற்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். இந்த நிலையில் இந்த வேளாண் துறை பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நெல் கொள்முதல் செய்யும் போது குவிண்டாலுக்கு 3500, கரும்புக்கு 4400 ரூபாயும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் எதிர்பாராத விதமாக விவசாயிகள் உயிரிழந்தால் அவர்களுக்கு காப்பீட்டு திட்டம், 58 வயது நிறைவடைந்த விவசாயிகளுக்கு மாத உதவித் தொகை, காவிரி கொள்ளிடம் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கூட்டுறவு வங்கி கடனை அதிகரிப்பது, கடைமடை வரை அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதி செய்வது, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய வேளாண் மற்றும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்யப்படுவது மற்றும் மேலும் பல புதிய அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+