MGR போட்ட உத்தரவை ரத்து செய்யும் விஜய்.. கள் இறக்க அனுமதி? வேளாண் பட்ஜெட்டில் பெரிய எதிர்பார்ப்பு
சென்னை: தமிழகத்தில் 'கள்' இறக்க தடை விதித்து கடந்த 1987ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், 'கள்' இறக்க அனுமதி கேட்டு விவசாயிகளின் குறிப்பிட்ட பிரிவினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில், இக்கோரிக்கை ஏற்கப்பட்டு 'கள்' இறக்க அனுமதி அளிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
'கள்' இறக்குமதியில் ஒரு காலத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தது. ஆனால், 'கள்' விற்பனையில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தன. இதுவே இன்னைக்கு தமிழகத்தில் 'கள்' இல்லாமல் போக காரணம்.

கள் போதையா?
ஆம், கள் போதைப்பொருள்தான். கள் மரத்திலிருந்து இறக்கப்பட்ட உடனே குடிப்பதால் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், நேரம் போக போக.. இறக்கப்பட்ட 'கள்' ஆல்ஹாலாக மாறும். இதை குடிக்கும்போது, நமது கல்லீரல் அதிக அளவில் வேலை செய்ய வேண்டி வரும். இதனால், உடலுக்கு ஆபத்து உண்டு.
போதைப்பொருள்
இது ஒரு பிரச்சனை எனில், மறுபுறம் கள்ளின் போதை மட்டும் போதாது என்று அதில் போதை மருந்து கலப்பதும் நடந்தது. குறிப்பாக கள்ளில் 'குளோரல் ஹைட்ரேட்' எனும் ஆபத்தான ரசாயனம் போதைக்காக கலக்கப்பட்டது. இதை குடித்த பலர் உயிரிழந்தனர். கண் பார்வை பறிபோனது. கள் என்கிற போர்வையில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது.
கள் இறக்க தடை
ஒவ்வொரு தென்னை, பனை மரமும் கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை போன்றது. ஒவ்வொரு மரமாக தேடி சென்று ஆய்வு செய்து பின்னர் விநியோகிப்பது என்பது சாத்தியமில்லாதது. மட்டுமல்லாது இதிலிருந்து பெரிய அளவுக்கு நிலையான வருவாயும் கிடைக்கவில்லை. எனவே இதையெல்லாம் பார்த்த அதிமுக அரசு, 1987ம் ஆண்டு ஜனவரி 1 முதல் கள் இறக்க தடை விதித்திருந்தது.
விவசாயிகள் வலியுறுத்தல்
சூழல் இப்படி இருக்கையில், விவசாயிகளில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீண்டும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். கள் உடலுக்கு நல்லது, இது போதைப்பொருள் கிடையாது.. யாரோ எங்கோ செய்யும் தவறால் விவசாயிகள் நாங்கள் பாதிக்கப்படும் என்று வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோரும் கள் இறக்கும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனவே நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. தவெக தனது தேர்தல் அறிக்கையில் இப்படியான எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
