தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்? திமுகவிடம் வேல்முருகன் வைத்த டிமாண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு 2 தொகுதிகளை கேட்டு டிமாண்ட் வைத்து வருகிறார் அக்கட்சித் தலைவர் வேல்முருகன்.

தொகுதிப் பங்கீடு மும்முரம் :

தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழா களைக்கட்டி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீட்டில் மும்முரமாக உள்ளன. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28+1 என்றும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 தொகுதிகள் எனவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அடுத்தடுத்து தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை திமுக வேகமாக நடத்தி வருகிறது.

TN Assembly Election 2026

வேல்முருகன் டிமாண்ட் :

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 1 தொகுதியை கேட்டு டிமாண்ட் வைத்திருக்கிறார் வேல்முருகன். கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியை தனக்கு கேட்கும் வேல்முருகன், தருமபுரி, சேலம், ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஒரு தொகுதியை கூடுதலாக த.வா.க.வுக்கு ஒதுக்க வேண்டும் எனக் திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்.

திமுக பேச்சுவார்த்தை குழு :

பல்வேறு காரணங்களை கூறி வேல்முருகனை சமாதானம் செய்துள்ள திமுக பேச்சுவார்த்தைக் குழு உங்கள் கோரிக்கையை திமுக தலைவரிடம் கொண்டு செல்வதாக கூறியிருக்கிறது.

திமுக கூட்டணியில் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் ஐக்கியமாகி உள்ளதால் அவர்களுக்கும் சீட் ஒதுக்க வேண்டியிருப்பதை பக்குவமாக வேல்முருகனுக்கு எடுத்துக் கூறி பிராக்டிகலாக பாருங்க என எடுத்துச் சொல்லியிருக்கிறாராம் அமைச்சர் கே.என்.நேரு.

அன்புமணிக்கு பதிலடி:

அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு பிரச்சாரத்தில் பதிலடி கொடுக்க வேல்முருகனை களமிறக்கும் ஐடியாவில் உள்ளதாம் திமுக. வேல்முருகனை பொறுத்தவரை திமுக கூட்டணியில் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றிருந்தாலும், சட்டசபையில் பல்வேறு விவகாரங்களை அமைச்சர்களுடன் நேரடியாக வாதம் செய்யும் வகையில் துணிச்சலாக உரையாற்றியவர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+