தமிழக சட்டமன்ற தேர்தல்.. கடந்த 10 தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம்.. அதிகபட்சம் எவ்வளவு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 17-வது சட்டசபை தேர்தல் நடக்கிறது. எஸ்.ஐ.ஆர் காரணமாக 43 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் உள்ளது. கடந்த 10 தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதன் என்ன என்ற விவரங்களை இங்கு காணலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு 43 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது எஸ்.ஐ.ஆருக்கு பிறகு தமிழகத்தில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர்.

Tamil Nadu Election 2026 Tamil Nadu Assembly Election 2026 2026

தமிழக சட்டசபை தேர்தல்

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் உள்ளது. இன்று எவ்வளவு வாக்கு சதவீதம் என்பது இன்று வாக்குப்பதிவு முடிந்த 6 மணிக்கு மேல் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதற்கு முன்பாக கடந்த சில தேர்தல்களில் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வாக்கு சதவீதம் எவ்வளவு பதிவானது என்ற விவரங்களை பார்க்கலாம்.

ஆண்டு - வாக்கு சதவீதம்

1.1980 - 65.4%
2.1984 - 73.5%

3.1989 - 69.2%
4.1991 - 63.8%

5. 1996 - 66.9%
6. 2001 - 59.1%

7. 2006 - 70.8%
8. 2011 - 78.2%

9. 2016 - 73.6%
10. 2021 - 76.6%

மிக குறைவான வாக்கு சதவீதம்

கடந்த 10 தேர்தல்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போதுதான் அதிகபட்சமாக 78.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கடந்த 2021 தேர்தலில் 76.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைவு என்று பார்த்தால் 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெறும் 59.1 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன. இதுவரை அதிகபட்சமாக உள்ள 78 சதவீதம் என்ற ரெக்கார்டை இந்த தேர்தல் முறியடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தேர்தலில் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டு இருப்பதாலும் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

90 சதவீதம் தொடும்?

அதாவது, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளால் ஒரே நபருக்கு இரண்டு இடங்களில் இருந்த வாக்குகளில் ஒன்று களையப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வாக்குகளும் நீக்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற காரணங்களால் வாக்கு சதவிகிதம் என்பது சர்வ சாதாரணமாக 85 சதவீதத்தினை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90 சதவீதம் தொட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை என்ற கருத்தும் மக்கள் மத்தியில் நிலவுவதை பார்க்க முடிகிறது.

இந்த 2026 சட்டசபை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 17.59 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. காலை 11 மணி நேர நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+