மாணவர்கள் போராட தடை விதிக்கும் சுற்றறிக்கை.. சட்டசபையில் மார்க்சிஸ்ட் கவன ஈர்ப்பு தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போராட்டங்களில் மாணவ - மாணவிகள் பங்கேற்பதை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுக்க கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிட்டது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய அமைச்சர் விஸ்வநாதன், 'உள்நோக்கத்துடன் சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை. தவறுதலான சில வாசகங்கள் இடம் பெற்றதால் சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது' என்று விளக்கம் அளித்தார்.

இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் சர்ச்சைக்குரிய வகையில் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டார். பின்னர் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

TN Assembly Marxist Party moves attention motion regarding the circular banning student protests

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மாரிமுத்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- "உயர் கல்வித்துறை இயக்குநர் அனைத்து கல்லூரிகளுக்கும், உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் குறிப்பாக இடதுசாரி மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடவடிக்கை குழுவுக்கு சுற்றறிக்கை வந்து இருக்கிறது" என்று பேசினார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், "குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரத்தில், தலைமையில் இருந்து சர்வே செய்வதற்காக அனுப்பப்பட்டார். ஆனால் தேவையில்லாமல் இதுபோல கடிதங்கள் எழுதி அதன் மூலமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவரங்களை கேட்டார். நேற்று தகவல் கிடைத்ததும் அவர் மாற்றப்பட்டார். வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறோம்" என்றார்.

இதையடுத்து, உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- "மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தவறுதலாக சில வாசகங்கள் இடம் பெற்றன. தவறுதலாக வாசகம் இடம் பெற்றதால் உடனடியாக சுற்றறிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+