தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைத்த பாஜக.. கவர்ச்சிகர அறிவிப்புக்கு சான்ஸ்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக இன்று தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

இந்த தேர்தல் அறிக்கையில், பொது மக்களை கவரும் வகையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் கனிமொழி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அமைத்துள்ளது. அதேபோல, அதிமுகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழுவை அமைத்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன் கூட்டியே முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை நேற்று அதிரடியாக வெளியிட்டார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய அம்சமாக ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும் இந்த தொகை குடும்ப தலைவிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
இது போக ஆண்களுக்கும் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் என்பது போன்ற கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவும் இன்று தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 12 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான திருமதி. Dr.தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது. 12 பேர் குழுவில் இடம்பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1. VP துரைசாமி ExMP
2. Dr.K.P.இராமலிங்கம் EXMP
3. Dr.P.கனகசபாபதி
4. Plot இராம ஸ்ரீநிவாசன்
5. திருமதி கார்த்தியாயினி ExMayor
6. திரு.நரசிம்மன் ExMP
7. KS இராதாகிருஷ்ணன்
8. ANS பிரசாத்
9. R.அர்ஜுனமூர்த்தி
10. திருமதி ராஜலட்சுமி
11. R.ரவிச்சந்திரன்
12. R.ஆதித்யா சேதுபதி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications