இதான் ஆர்எஸ்எஸ்.. ஜனாதிபதி புதிய நாடாளுமன்றம் வந்தால் கங்கை வற்றும் அளவு கழுவ நினைப்பார்கள் -அப்பாவு
சென்னை: புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை வந்தால் அதை கங்கை நீரை கொண்டு கழுவ வேண்டும் என நினைத்ததால் அவர்களை அழைக்கவில்லை எனவும் இதுவே ஆர்.எஸ்.எஸ் மனநிலை என்றும் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார்.
சென்னை நந்தனத்தில் அமைந்து உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2023 ஆம் ஆண்டுகான விருது விழங்கும் விழா நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜாவுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுக்கு காமராஜர் கதிர் விருது வழங்கப்பட்டது.

இந்த விழாவில் பங்கேற்று விருது பெற்ற சபாநாயகர் அப்பாவு அதன் பின்னர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நேற்று நடைபெற்ற புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காததை விமர்சித்து பேசினார். அவர் பேசுகையில், "தாழ்த்தப்பட்டவர்களுக்காக மட்டுமின்றி, இந்த சமூகத்தில் கடைநிலையில் உள்ள, தவறு செய்தால் தட்டிக்கேட்கும் நிலையில் அனைத்து சமூகத்துக்கும் பொதுவான ஒரு தம்பி திருமாவளவன்.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான திருமாவளவன்கள் தோன்ற வேண்டிய காலமும், கட்டாயமும் இப்போது ஏற்பட்டுவிட்டது. ஜனநாயகத்தின் உடைய உயரிய மரியாதையை குடியரசுத் தலைவருக்கு தான் கொடுத்து இருக்கிறார்கள். அவரை அழைக்காமல் இருப்பதை நாட்டு மக்கள் வேதனையோடு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
கங்கை தண்ணீர் வற்றிப்போய்விடும். அவ்வளவு தண்ணீரை கொண்டு வந்த மீண்டும் கழுவுவார்கள். அந்த அளவுக்குதான் அவர்கள் இருக்கிறார்கள். அதைதான் ஆர்.எஸ்.எஸ். எந்த நிலையில் இப்போதும் இருக்கிறது என்பதை எண்ணிப்பாருங்கள்." என்றார். டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக புதிய நாடாளுமன்றத்தை இந்தியாவின் மிக உயரிய அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஜனாதிபதி திரௌபதி முர்முவே திறந்து வைக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அதை திறக்கக்கூடாது எனவும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
அதன் பின்னர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கே மத்திய அரசு அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவையே புறக்கணிப்பதாக 19 எதிர்க்கட்சிகள் அறிவித்தன. அதன் பேரில் நேற்று 19 கட்சிகளும் பங்கேற்கவில்லை.
நேற்று புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அவர்கள் விழாவில் பங்கேற்காத நிலையில் அவர்கள் எழுதிய வாழ்த்து குறிப்புகள் வாசிக்கப்பட்டன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications