உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா? அதிமுக எம்.எல்.ஏவுக்கு சபாநாயகர் அப்பாவு கேள்வி!
சென்னை: மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ ஆர்பி உதயகுமார் இன்று சட்டசபையில் பேசிய நிலையில், சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, "உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் நாகை மாலிக், பிரின்ஸ், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்ட பின்பும் அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் மட்டும் அவையில் இருந்து மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார். அதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏழை எளிய பெண்கள் விடுபட்டுள்ளனர். வசதிபடைத்த குடும்பத் தலைவிகள் ரூ.1000 பெற்றுள்ளனர். முதலமைச்சர் ஒரு கோடி பேருக்கு உரிமைத் தொகை என அறிவித்தது உண்மை, ஆனால் அது 28 மாதங்கள் கழித்து. ஆனால் முதலமைச்சர் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்து தேர்தல் அறிக்கை தந்த போது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்குவோம் என கூறி இருந்தார் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "ஒண்ணே ஒண்ணு சொல்றேன். உதயகுமார் வீட்டம்மாவுக்கு மாதம் 1000 ரூபாய் வேணுமா? அப்பாவு வீட்டு அம்மாவுக்கு 1000 ரூபாய் வேணுமா? இதையெல்லாம் மனசாட்சியை தொட்டு, சாதி, மதம், இனம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் குறைபாடுகள் உங்கள் கவனத்திற்கு வந்தால் சுட்டிக்காட்ட வேண்டும், சாமானிய மக்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க உதவ வேண்டும்.." என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஆர்.பி.உதயகுமார், "முதலமைச்சர் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். மீண்டும் மேல் முறையீடு செய்ய முன்வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். பல இடங்களில் சர்வர் வேலை செய்யததால் மக்கள் எங்கே சென்று விண்ணப்பிப்பது என்று தெரியவில்லை. நிபந்தனைகளை தளர்த்தி குடும்பத்தலைவிகளின் விண்ணப்பங்களை ஏற்க வேண்டும்" எனக் கூறினார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், "நிபந்தனைகளுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்களை தள்ளுபடி செய்யவில்லை. அப்படி ஏதாவது நடந்திருந்தால் ஆதாரத்தை கொண்டு வந்து கொடுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்னிடம் வந்து தருவதற்கு அரசியல் பார்க்கிறீர்கள் என்றால், அங்கிருக்கும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
-
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications