தன்னாட்சி கல்லூரிகள் ஹேப்பி.. பாட திட்டம் விஷயத்தில் முடிவை மாற்றிய தமிழக அரசு.. முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழக அரசின் மாதிரி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடப் பிரிவுகளுக்கு இடையே 75% இணைத்தன்மை இல்லை. பாடப் பிரிவுகளுக்கு இடையே இணைத்தன்மை இல்லாததால் மாணவர்கள் பணியில் சேர சிரமப்படுகிறார்கள். உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலேயே மாதிரி பாடத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மாதிரி பாடத்திட்டத்தை தன்னாட்சி பல்கலைக்கழகங்களும் அமல்படுத்த வேண்டும் என்று முன்பு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு சுயநிதி கல்லூரி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் மாதிரி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் தன்னாட்சி கல்லூரிகள் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
"மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாநிலத்தில் உள்ள 90 சதவீத அரசு உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்லூரியின் தன்மைக்கேற்ப சில மாற்றங்களுடன் மாதிரி பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளன.
இந்த நிலையில் மாதிரி பாடத்திட்டத்தின் நோக்கத்தை விளக்க உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் அனைத்து தன்னாட்சி கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில், இந்த புதிய மாதிரி பாடத்திட்டம் 70 சதவீத தன்னாட்சி கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
சில தன்னாட்சி கல்லூரிகள், அவர்களது கல்லூரியில் தற்போது கற்பிக்கப்படும் பாடத்திட்டம் சிறப்பாக உள்ளதாகவும், இந்த மாதிரி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் அவர்களது கல்லூரி தன்னாட்சியின் உரிமைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கருதுவதாக கருத்துகள் தெரிவித்தன.
தன்னாட்சி கல்லூரிகள் சார்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் கவனமுடன் பரிசீலிக்கப்பட்டன. இதன்படி தன்னாட்சி கல்லூரிகள் இந்த புதிய மாதிரி பாடத்திட்டத்தை தங்களது கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தி கொள்வது குறித்து அவர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்து கொள்ளப்படுகிறது" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications