சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சபாஷ் சரியான போட்டி.. உதயநிதியை விவாதத்திற்கு அழைக்கும் பாஜக இளைஞரணி தலைவர்.. இதுதான் தலைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ்.பி.செல்வம், உதயநிதியுடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலின் தலைமை ஏற்றால் இளைஞர்களை வெகுவாக கவர முடியும் என்றும் ஒட்டு மொத்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்கள். இதனால் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

TN Bharatiya Janata Yuva Morcha Leader Vinoj P Selvam called dmk youth wing secretary udhayanith stalin for debate

இதன்படி திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று முறைப்படி பொறுப்பேற்றார்.அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. உதயநிதி நியமனம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.. உதயநிதி நியமனம் குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி

உதயநிதி ஸ்டாலினின் நியமனம் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் எதிர்முகமான பாஜகவில் இருந்தும் உதயநிதிக்கு வாழ்த்து வந்துள்ளது. தமிழக பாஜக இளைஞரணி தலைவர் (தமிழக பாரதிய ஜனதா யுவ மோர்சா) வினோஜ்.பி.செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் உதயநிதிக்கு விவாத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உதயநிதி மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து வினோஜ்.பி.செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். களப்பணியில் பாஜக இளைஞரணி Vs திமுக இளைஞரணி எனும் தலைப்பில் உங்களோடு விவாதிக்க ஆவலாக இருக்கிறேன். எங்கே, எப்போது என்பதை எனக்கு தயவு செய்து தெரியப்படுத்துங்கள்" என கூறியுள்ளார்.

இதை பார்த்து நெட்டிசன்கள் சபாஷ் சரியான போட்டி, இப்படித்தான் ஆரோக்கியமான போட்டிகள் நடக்க வேண்டும் என பாராட்டி உள்ளார்கள்.

English summary
dmk youth wing secretary udhayanith stalin can debate with me, called by TN Bharatiya Janata Yuva Morcha Leader Vinoj P Selvam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X