"அக்கா இறந்தபோது எந்த மத சடங்கை கடைப்பிடித்தார் திருமாவளவன்".. பாஜக மகளிர் அணி பகீர் தாக்கு!
திருமாவளவனை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் மீனா வினோத்குமார்
சென்னை: "கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை பற்றிய குறைகளை சொல்வதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா? அவங்க அக்கா இறந்தபோது எந்த மதத்தின்படி சடங்கு செய்தார்கள்? ஒரு பிராமணரை வரவழைத்துதானே சடங்கு செய்தாங்க? இத்தோடு நிறுத்திக்கணும் எல்லாத்தையும்" என்று விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாஜக மகளிர் அணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில மகளிரணி துணை தலைவர் மீனா வினோத்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது:
"திருமாவளவன் பேசிய கொச்சையான வார்த்தைகளால், எங்கள் இந்து சமுதாயமும், இந்து பெண்களும் மிகவும் கொந்தளித்து இருக்கிறோம்.. அந்த கொந்தளிப்பினால்தான் தமிழகம் முழுவதும் நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம்.. அந்த வகையில் கரூரிலும் மிகப்பெரிய மகளிர் அணி சார்பாக போராட்டம் நடத்தினோம்.

திருமாவளவன் அவர்களே, இந்து பெண்களை என்ன கிள்ளுக்கீரைன்னு நினைச்சிட்டீங்களா? முதலில் இருந்தே இந்துக்களுக்கு எதிரான கருத்தைதான் சொல்லிட்டு வர்றீங்க, இந்து கோயில்களுக்கு எதிரான கேவலமான கருத்தை சொன்னீங்க, இந்துக்களில் இருக்கும் ஜாதி பற்றி சொன்னீங்க, இப்போது இந்து பெண்களை சொல்றீங்க?
வரிசையா இந்துக்களை மட்டுமே ஏன் குறி வெக்கறீங்க? கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை பற்றிய குறைகளை சொல்வதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கா? அப்படி சொல்லிட்டீங்கன்னா, வெளியில தைரியமா நடமாடிடுவீங்களா? நாங்க அமைதியாக இருக்கவும், என்ன வேணும்னாலும் சொல்லலாம்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? உங்களுக்கு சமஸ்கிருதம் படிக்க தெரியுமா? தவறா எப்படி சொல்லலாம்?
இல்லாத ஒரு விஷயத்தை ஏன் முயற்சி பண்றீங்க? யாரை திருப்திப்படுத்த இப்படி செய்றீங்க? நீங்க எந்த மதத்தில் பிறந்தீங்க? உங்க அப்பா, அம்மா தங்கை, எல்லாரும் எந்த மதத்தில் இருக்காங்க? உங்க அக்கா இறந்தபோது எந்த மதத்தின்படி சடங்கு செய்தீங்க? ஒரு பிராமணரை வரவழைத்துதானே சடங்கு செய்தீங்க? உங்களுக்கு மட்டும் இந்து மத சடங்கு தேவை. ஆனால், இந்து பெண்கள் என்றால் எதை வேணும்னாலும் பேசுவீங்களா?
இந்து பெண்களின் காலில் விழுந்தாலும் நீங்க செய்த பாவம் போகாது.. ஏழேழு ஜென்மத்துக்கு இந்து பெண்களின் ஓட்டுக்களை உங்களால் வாங்க முடியாது... நாங்க எப்பவுமே "ஜே" சொல்றது பாரத மாதாவுக்கு மட்டும்தான்.. இந்த பேச்சோடு இதோடு நிறுத்திக்கணும். இதுவரை பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும் இந்து பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அனைத்து இந்து பெண்களும் ஒன்று சேர்ந்து போராடுவோம்.. மன்னிப்பு கேட்கும்வரை உங்களை விட மாட்டோம்" என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications