அண்ணாமலையால் பாஜகவுக்கு ‘டேஞ்சர்’.. திருடனா தேடி பிடிச்சு கட்சியில் சேர்த்தா இப்டிதான்: எஸ்வி சேகர்
சென்னை: பாஜக மட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் 25 சீட்களை பிடித்துவிட்டால் நான் மன்னிப்பு கேட்கிறேன் என எஸ்.வி. சேகர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், அண்ணாமலை தலைவராக இருக்கும் வரை பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்றும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், தமிழக பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் எஸ்.வி.சேகர். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சும்மா எதற்கெடுத்தாலும் குறையே சொல்லிக்கொண்டு இருக்கக் கூடாது. சாதாரணமாக விபத்து ஏற்பட்டால் கூட சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அப்படி ஒரு கட்சி சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு பார்வை சரியில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்று. இதனை அரசியல் ஆக்குவதால் எந்த ஆதாயமும் கிடைக்காது. ஆளுநர் எல்லா விவகாரத்திலும் இதேபோல் செய்து கொண்டிருந்தால் ஆளுகின்ற அரசு மீதுதான் மக்களுக்கு சிம்பதி ஏற்படும்" என தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.
மேலும் அவர் பேசுகையில், "தமிழக பாஜகவை பொறுத்தவரை, இப்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசக்கூடிய நமீதா போன்ற சிறந்த பேச்சாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு இருப்பதால் கட்சி சீக்கிரமாக முன்னுக்கு வந்துவிடும். நான், ராதாரவி போன்றவர்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாததால் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள்.
ஒரு கட்சி என்றால் எப்படி இருக்கணும். ஒருத்தர் ஒரு கட்சியில் சேர்ந்திருக்கிறார் என்று சொன்னால், அவரை பார்த்து இன்னொருவரும், அவரது மனைவியும், பிள்ளைகளும் அந்தக் கட்சியில் சேர விரும்ப வேண்டும். அதுதான் கட்சி. ஆனால் தமிழக பாஜக இப்போது எப்படி இருக்கிறது? ரவுடி, பொறுக்கி, திருடன், காலையில் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுட்டு வர்றவன எல்லாம் கட்சியில் சேர்த்து வெச்சிருக்கீங்க. இவங்களை எல்லாம் சேர்த்தால் கட்சிக்கு ரொம்ப மரியாதை இருக்கும்ல.
அண்ணாமலை ஐபிஎஸ் சர்வீஸ்ல இருந்த போது, அப்போ உள்ள எல்லா திருடனோட அட்ரஸையும் வெச்சிட்டு, இப்போ அவங்கள கூட்டிட்டு வந்து கட்சியில் சேர்க்குற மாதிரி தெரியுது. இப்படி ஒருவர் கூட மதிக்காத கட்சியாக தான் தமிழக பாஜகவை அண்ணாமலை மாற்றிக் கொண்டு வருகிறார்.
அதிமுக உடனான கூட்டணி முடிவுக்கு வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம். கட்சியின் நலனை தாண்டி தான் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர் எடுத்த மட்டமான முடிவு. இதனால் தமிழக பாஜகவிற்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.
தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதிலேயே குறியாக இருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருக்கிறது. இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை 25 இடங்களை பிடித்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 30 இடங்களை கைப்பற்றும்" எனத் தெரிவித்தார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications