அத்வானிக்கு ரத யாத்திரை.. முருகனுக்கு வேல் யாத்திரை.. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வழி பிறக்குமா?!

வெற்றிவேல் யாத்திரைக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருவதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "வெற்றிவேல் யாத்திரை" மூலம் கோட்டைக்கு எம்எல்ஏக்களை அனுப்ப முடியும் என்று பாஜக பலமாக நம்புகிறது! அதாவது, வில்லில் இருந்து வேலுக்கு தாவி உள்ளது பாஜகவின் நம்பிக்கை!

சட்டமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு வியூகங்களை வகுத்து களத்தில் இறங்கிவிட்டன... கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடந்து வருகின்றன.

இதில், திமுக, அதிமுக கட்சிகள் எப்போதுமே வழக்கம்போல் விறுவிறுப்புடன் களமிறங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.. ஆனால், இந்த முறை பாஜக படுவேகமாக கோதாவில் குதித்துள்ளது.. திமுகவை வீழ்த்த எந்த அளவுக்கு அதிமுக முயற்சி எடுக்குமோ, அந்த முயற்சியை இந்த முறை பாஜக எடுத்து வருகிறது.. நேரடியாக திமுகவை டார்கெட் செய்தே களவேலையை கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.

 எல்.முருகன்

எல்.முருகன்

இதில் அதீத அக்கறை காட்டி வருபவர் மாநில தலைவர் எல்.முருகன்தான்.. அவர் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழக பாஜக சுறுசுறுப்பாக இயங்க வைத்து கொண்டிருக்கிறார்.. ஏராளமான பிரபலங்களை பாஜகவுக்குள் இழுத்து போடும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.. அதன் பலனும் வெற்றியை தந்து வருகிறது..

 பாஜக எம்எல்ஏக்கள்

பாஜக எம்எல்ஏக்கள்

அடிக்கடி செய்தியாளர்கள் சந்திப்பில் முருகன் சொல்வது போல, கணிசமான பாஜகவினரை எம்எல்ஏக்களாக சட்டமன்றத்தில் உட்கார வைக்கவும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். விரைவில் காவி கொடி கோட்டையில் பறக்கும் என்ற அவரது வாசகமே அதற்கு உதாரணம்.. இதற்கு முன்னெடுப்பாக அவர் கையில் உள்ளதுதான் "வெற்றிவேல் யாத்திரை".

 அத்வானி

அத்வானி

யாத்திரை என்றாலே பாஜகவினர்தான் ஃபேமஸ்.. அத்வானி ஆரம்பித்த யாத்திரை மூலம்தான் இந்த கட்சி நாடு முழுவதும் போய் பரவலாக சேர்ந்தது. யாத்திரைகள் எந்த அளவுக்கு பாஜகவுக்கு பலன் தருமோ அதே அளவுக்கு சர்ச்சைகளையும் தரும் என்பதையும் மறுப்பதற்கில்லை.. ராம ராஜ்ஜியம் அமைப்போம் என யாத்திரை நடத்தி ஆட்சியையும் பிடித்ததை இங்கே நினைவுகூர வேண்டி உள்ளது.

 கருப்பர் கூட்டம்

கருப்பர் கூட்டம்

இப்போது தமிழகத்தில் இப்படி ஒரு யாத்திரை தான் மறுபடியும் நடக்க போகிறது.. எல்.முருகன்தான் இதற்கு ஐடியா வகுத்துள்ளார். கறுப்பர் கூட்டம் விவகாரத்தின்போதுதான், முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மவுசு பாஜகவினருக்கு தெரியவந்துள்ளது.. அதனாலேயே தமிழகத்தின் முருகப்பெருமான் ஸ்தலங்கள் இருக்கும் ஊர்களில் இந்த வெற்றிவேல் யாத்திரையை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இப்படியொரு யாத்திரையை நடத்த அனுமதி கிடைக்குமா என்பதுதான் தெரியவில்லை..

 கொரோனா

கொரோனா

இது கொரோனா காலம்.. முக்கிய நிகழ்வுகளுக்கும், கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முருகனின் யாத்திரைக்கு அனுமதி கிடைக்குமா? மறுக்கப்படுமா? என்பது மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஒன்றுதான்... மற்றொருபுறம் இந்த யாத்திரை குறித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதால். அவர்கள் யாருமே இதை கண்டுகொள்ளவில்லையோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆக மொத்தம், யாத்திரை நடத்தி எம்எல்ஏக்களை செயின் ஜார்ஜ் கோட்டைக்குள் நடத்த ஜரூர் வேலைகள் நடந்து வருகிறது போல தெரிகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+