அண்ணாமலை அரசியலில் கத்துக்குட்டி.. "அவரை எல்லாம்" விட்டு விளாசிய செல்லூர் ராஜூ.. இப்படி சொல்லிட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி இடையே அவ்வப்போது லேசாக உரசல் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. டெல்லியில் உள்ள தலைமையுடன் அதிமுக இணக்கமாகவே இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே அவ்வப்போது வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சாடியிருந்தார்.

TN BJP Leader Annamalai Just have one year experience in Politics, ADMK Sellur Raju Slams

செல்லூர் ராஜூ கூறுகையில், "அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்னங்க இருக்கு... அண்ணாமலை மாநில தலைவர் அவ்வளவு தான்.. "ஜஸ்ட் லைக்" மற்றதை பற்றி எங்களுக்கு ஒன்னும் இல்லை. எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். என்று கூறியிருந்தார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, யார் பேசினால் யாருக்கு பதில் சொல்லனும் என்பதற்கு தரம் இருக்கிறது.

சில பேர் அரசியல் விஞ்ஞானியாக தன்னை நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தை நான் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு எந்த ஒரு லீடரின் அப்ரூவலும் தேவையில்லை. மக்களுடைய அப்ரூவல் வேண்டும். சில பேர் தங்களை அரசியல் விஞ்ஞானியாக நினைத்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை" எனக் காட்டமாக விமர்சித்தார்.

இந்த நிலையில், தன்னை அரசியல் விஞ்ஞானி என்று விமர்சித்த அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், ஒரு வருடம் அரசியலுக்கு வந்து ஒரு வருடத்தில் தலைவராகி இருப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செல்லூர் ராஜூ கூறியதாவது:- தேசிய கட்சியான பாஜகவில் கூட்டணி உள்பட முக்கிய முடிவுகளை அக்கட்சியின் தேசிய தலைவர்கள்தான் எப்போதும் எடுப்பார்கள். அந்த அடிப்படையில் தான் எங்களுக்கு மோடி, அமித்ஷா, ஜேபிநட்டா என்று சொன்னேன். ஆனால், அரசியல் விஞ்ஞானிக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார்.

அண்ணாமலையை பொருத்தவரை அவர் அரசியலில் கத்துக் குட்டி என்று எல்லோருக்கும் தெரியும்.
கட்சியில் சேர்ந்து ஒரு ஆண்டில் தலைவராக பதவியேற்றுள்ளார். ஆனால் நான் அப்படி கிடையாது. ஆரம்பத்தில் இருந்து அதிமுக உறுப்பினர், வட்ட செயலாளர், பகுதி செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியிருக்கிறேன். அதேபோல், கவுன்சிலர், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அதன்பிறகு அமைச்சர் என இன்று அதிமுக அமைப்பு செயலாளராக உள்ளேன்.

படிப்படியாக இந்த பதவிகளுக்கு வந்தேன். 40 வருடத்திற்கும் மேலாக பொது வாழ்வில் உள்ளேன். என்னைப் பற்றியும் நான் மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியும் மதுரை மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். அண்ணாமலையின் கருத்துக்களை நான் பொருட்படுத்துவது இல்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். எங்கள் மீது ஒரு துரும்பு எறிந்தால் கூட பதிலுக்கு நாங்கள் இரும்பை வீசுவோம்.

அதிமுகவை விமர்சிப்பவர்கள், தமிழக அரசியலில் தங்களுக்கான இடம் என்ன? என்பதையும் அறிந்து கொண்டு விமர்சித்தால் நன்றாக இருக்கும். தமிழ்நாட்டில் அதிக நாள் ஆட்சியில் இருந்த கட்சி அதிமுகதான், அதேபோல் 2 கோடி தொண்டர்களை கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அண்ணாமலைக்கு காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஜெயக்குமார் கூறுகையில், "பொதுவாகவே ஒரு அடிமட்ட தொண்டனை விமர்சனம் செய்தால் கூட எங்களுடைய கடுமையான ஆட்சேபனை, கடுமையான கண்டனத்தை தெரிவிக்க நாங்கள் தவறியது கிடையாது.. இது அண்ணாமலைக்கே தெரியும்.. அதிமுகவை தொட்டால் கெட்டான் என்று... அந்த நிலை அண்ணாமலைக்கு தெரியும் என்பதால் எதுவாக இருந்தாலும் சரி.. நான் ஏற்கனவே சொன்னது போல இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு..

அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி.. செல்லூர் ராஜூவாக இருந்தாலும் சரி.. யாராக இருந்தாலும் நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். எங்கள் கட்சியினரை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்க வேண்டிய ஒரு நிலை கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமையை அண்ணாமலை கண்டிப்பாக ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது" என்று கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+