முட்டையை காண்பித்த உதயநிதி.. இது தான் நீட் ரகசியமா? சீண்டிய பாஜக தலைவர் அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டார்கள் என்றும் உதயநிதி போன்றவர்கள் அவர்களும் படிக்கவில்லை, அவர்களை போல குழந்தைகளும் படிக்கக் கூடாது என நினைக்கின்றனர் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். பூத் அளவில் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும். இப்போ நான் பேசும் போதே உடுமலை பேட்டை, கோவை, மதுரையில் எல்லாம் காலையில் இருந்தே பிரச்சினை.. தொண்டர்கள் எல்லாரும் இன்றில் இருந்தே கட்சி கொடிகம்பத்தை நடுவோம் என்று ஆரம்பித்துவிட்டார்கள்.

 TN BJP Leader Annamalai slams Udhayanidhi Stalin’s ‘egg campaign’ against NEET

இது எல்லாமே கட்சியினுடைய வளர்ச்சி.. தொண்டர்களுக்கு உற்சாகம்..புதிய தொண்டர்கள் கட்சிக்கு வருகிறார்கள். பாஜக வளர்ச்சிக்கு திமுக பெரும் உதவி செய்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு தொண்டன் எப்போது தலைவன் ஆகிறான் என்றால் இதுபோன்ற சவால்களை சந்திக்கும் போதுதான் தலைவன் ஆகிறான். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது. 2021 சட்டசபை தேர்தலின் போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை விளக்கும் வகையில் ஒற்றை செங்கல் ஏந்தி பிரசாரம் உதயநிதி செய்தார்.

முட்டையை காண்பித்த உதயநிதி: அதனைத் தொடர்ந்து ஜீரோ பெர்சண்டைல் விவகாரத்துக்காக முட்டையை காண்பித்து உதயநிதி பேசியுள்ளார். இந்த நிலையில், இது குறித்து விமர்சித்துள்ள அண்ணாமலை, நீட்டிற்கான ரகசியம் முட்டையா என சாடியுள்ளார். அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து கூறியதாவது:- நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து தினமும் 100 கொடிக்கம்பங்கள் நடப்படும். பூத் அளவில் 10 ஆயிரம் கொடிக்கம்பங்கள் நடப்படும். இப்போ நான் பேசும் போதே உடுமைலை பேட்டை, கோவை, மதுரையில் எல்லாம் காலையில் இருந்தே பிரச்சினை..

தொண்டர்கள் எல்லாரும் இன்றில் இருந்தே கட்சி கொடிகம்பத்தை நடுவோம் என்று ஆரம்பித்துவிட்டார்கள். இது எல்லாமே கட்சியினுடைய வளர்ச்சி.. தொண்டர்களுக்கு உற்சாகம்.. புதிய தொண்டர்கள் கட்சிக்கு வருகிறார்கள். பாஜக வளர்ச்சிக்கு திமுக பெரும் உதவி செய்து கொண்டு இருக்கிறது. ஏனெனில் ஒரு தொண்டன் எப்போது தலைவன் ஆகிறான் என்றால் இதுபோன்ற சவால்களை சந்திக்கும் போதுதான் தலைவன் ஆகிறான். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது.

சீப்பை மறைத்து வைத்தால்?: கொடிக்கம்பத்திற்கு முழுமையாக அனுமதி பெறவில்லை என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளது என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, லோக்கலில் இருக்கும் காவல்துறைக்கு சம்பந்தப்பட்டது. ஜனநாயகத்தில் உரசல்கள் இருக்கும். பாஜக கொடிக்கம்பம் வைக்கிறது என்றால் தமிழ்நாட்டில் எங்கே அனுமதி கொடுக்கிறார்கள். எல்லா இடத்திலும் மனுவை வாங்கி வைத்துக் கொண்டு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.

கொடிக்கம்பத்தை பொறுத்தவரை பொதுமக்களுக்கு பிரச்சினையாக உள்ளதா, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா? என்பதை பார்த்து விட்டு காவல்துறையே அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனுமதியே கொடுப்பது இல்லை. கொடிக்கம்ப விவகாரத்தை பொறுத்தவரை சீப்பை ஒளித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என்று திமுக நினைக்கிறது. கொடிக்கம்பம் வைங்க என்று தொண்டர்களிடம் சொன்னால் கூட மெதுவாக வைத்துக் கொண்டு இருந்தார்கள்.

முட்டை தான் ரகசியமா?: இப்போது திமுகவினரால் அது வேகமாக நடக்கிறது. மாநில தலைவராக இது எனக்கு சந்தோஷம். நீட்-க்கு எதிராக யாருமே இல்லை. திமுக மட்டும் ஏன் அதற்கு எதிராக இருக்கிறது என்றால் நீட்டை வைத்து அரசியல் செய்து விட்டது. அதில் இருந்து வெளியே வரமுடியாது. அதை வைத்து 2016-ல் இருந்து திமுக அரசியல் செய்கிறது. ஆகவே அதில் இருந்து வெளியே வர முடியாது.

வெளியே வர முடியாத காரணத்தால் உதயநிதி ஸ்டாலினுக்கு இமேஜ் மேக் ஓவர் வேண்டும். நீட்டிற்கான ரகசியம் முட்டையா.. முட்டையை கொண்டு வந்து நீட்டிற்கான ரகசியம் என்கிறார். முட்டை முதலில் வந்ததா... கோழி முதலில் வந்ததா என உதயநிதி ஸ்டாலின் சொல்லட்டும் முதலில்.. அதன்பிறகு நீட் ரகசியத்தை சொல்லட்டும். இதெல்லாம் மக்களை முட்டாளாக்கும் செயல். தமிழக மக்கள் நீட்டை ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+