தமிழக பாஜக நிர்வாகிகள் 30 சதவீதம் மாற்றம்? பரபர பின்னணி
சென்னை: தமிழக பாஜக நிர்வாகிகள் 30 சதவீதம் வரை விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் உள்ள பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக பாஜக மையக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, கட்சியின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எம்எல்ஏ வானதி ஸ்ரீநிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், சிபி ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கட்சி தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த கூட்டம் சுமார் 6 மணி நேரம் நடந்தது. பல்வேறு விஷங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நிர்வாகிகள் மாற்றம்
கூட்டத்தில் தமிழக பாஜகவில் நிர்வாகிகள் மாற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போதைய நிர்வாகிகளில் யாருக்கு என்ன பொறுப்பு வழங்குவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நிர்வாகிகள் மாற்றத்துடன் விரைவில் தமிழக பாஜக கட்சி புனரமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் வெளியீடு
இந்த மாற்றமானது மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் அணி - பிரிவு ஆகிய மட்டங்களில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் நிர்வாகிகள் மாற்றம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் இருக்கும் எனவும், இந்த நிர்வாகிகள் மாற்றத்தை பாஜக மேலிட ஒப்புதலுடன் மாநில பாஜக தலைமை வெளியிடவும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் செயல்படாதவர்கள் மாற்றம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

காரணம் என்ன
முன்னதாக மார்ச் 23ம் தேதி டெல்லிக்கு சென்ற அண்ணாமலை பாஜகவின் தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் பாஜகவின் செயல்பாடு, நிர்வாகிகளின் நிலை குறித்து எடுத்து கூறியுள்ளார். இதை கேட்ட தேசிய தலைவர்கள் அவருக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளனர். வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் மக்களவை எதிர்ககொள்ளும் வகையில் தமிழகத்தில் செயல்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளதாக தெரிகிறது. இதன் முதற்கட்டமாக தான் பாஜகவில் அதிரடியாக நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

30 சதவீதம் மாற்றம்
கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் இருக்கும் நிலையில் மாநில தலைவர் பதவி அண்ணாமலைக்கு கிடைத்தது. இதையடுத்து அவர் நிர்வாகிகளை மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் வந்ததால் நிர்வாகிகள் அப்படியே தங்கள் பதவிகளில் செயல்பட்டனர். இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சுமார் 30 சதவீதம் அளவில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
"மக்கள் சக்தி இயக்கம்".. அண்ணாமலை தொடங்கும் புதிய அரசியல் பாதை? அமித் ஷா தந்த ரியாக்சன் என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஜூன் 15ஆம் தேதி புதிய கட்சி? பெருந்துறையில் அண்ணாமலை போட்டி? என்ன செய்ய போகிறது பாஜக? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications