பாஜகவினர் வீடுகளில் வேல் பூஜை .. முருகன், வானதி சீனிவாசன், ஹெச் ராஜா வெளியிட்ட படங்கள்
சென்னை: தமிழகம் முழுவதும் பாஜகவினர் தங்களது வீடுகளில் வேல் பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் படித்தனர். பாஜக தலைவர் முருகன், பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜகவினர் பலர் வேல் பூஜை டுவிட்டரில் படங்களை வெளியிட்டுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இதையடுத்து கோடிக்கணக்கான முருகப் பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டும் வகையில் இந்த நிகழ்வை நடத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார் . அவர் வெளியிட்ட அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் தமிழ் கடவுள் முருகனை வேண்டிப் பாடும் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கல் மன வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மிக பக்தர்கள், முருகப் பக்தர்கள், காவடி குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று மாலை சரியாக 6.01 மணிக்கு பக்தர்கள் அனைவரும் வீடுகள் தோறும் வேல் அல்லது முருகன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்கு காட்டுவோம், மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைவர் முருகன் தனது வீட்டில் வேல் பூஜை செய்த புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

இதேபோல் பாஜக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் தனது இல்லத்தில் வேல் பூஜை நடத்தி அதன் படங்களை வெளியிட்டுள்ளார்.

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தனது இல்லத்தில் வேல் பூஜை நடத்தி புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications