"10" ஞாபகம் வெச்சுக்குங்க.. பாஜகவின் 2 முக்கிய மேட்டர்.. முருகனுக்கு தந்த மெகா அசைன்மென்ட்..!
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: எல்.முருகனுக்கு ஒரு முக்கியமான அசைன்மெட்டை பாஜக மேலிடம் தந்துள்ளதாம்.. அதை பற்றிதான் இப்போது பேச்சாக இருக்கிறது.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர போகிறது.. இந்த தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. இப்போது உள்ளதுபோல, அந்தந்த கட்சிகள், அதே கூட்டணிகளுடன் உள்ளாட்சி தேர்தலையும் இணைந்து சந்திக்க உள்ளது.
இதில் தேமுதிக மட்டும் திமுக பக்கம் வரலாம் என்று சொல்லப்படுகிறது.. சீமான் எப்படியும் வழக்கம்போல தனியாகத்தான் நிற்பார்.. கமல் சத்தத்தையே காணோம்..!

பிளான்
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்தாலும், பாஜக உள்ளாட்சி தேர்தலைவிட வரப்போகும் எம்பி தேர்தலுக்கான பிளானில் இப்போதே குதித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக 2 விதமான மேட்டர்களை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன..

மீடியா
முதலாவதாக, மத்திய செய்தி ஒலிபரப்பு துறை சார்பில், தமிழகத்திற்காக ஒரு திட்டத்தை தயார் செய்து இணை அமைச்சர் முருகனிடம் தந்துள்ளதாம்.. அதில் தமிழகத்தில் பாஜகவை எப்படி பலப்படுத்த வேண்டும், தமிழக பாஜக தலைவர்களை எப்படி மீடியாவில் கொண்டு வர வேண்டும் என்று டீடெயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இதற்கு கட்சி மேலிடமும் அனுமதி அளித்துவிட்டதாக சொல்கிறார்கள்.

பிரச்சாரம்
அதுமட்டுமல்ல, தமிழகத்தின் தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவிற்கு ஆலோசகர்களாக பாஜக தலைவர்களையே நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஏனெனில் தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊடகங்கள் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அதனால், தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் சேவைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலேயே பாஜக இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக இன்னொரு செய்தி கசிந்து வருகிறது..

முருகன்
இரண்டாவதாக, தமிழக பாஜக தலைவர்களுக்கு தேசிய அளவில் முக்கிய பதவிகள் வழங்கப்பட உள்ளனராம்.. இது எதற்காக என்று தெரியவில்லை.. மத்தியில் முருகனுக்கும், மாநிலத்தில் அண்ணாமலைக்கும் மிகப்பெரிய பொறுப்புகளை தந்ததால், கட்சியின் சீனியர்களுக்கு தேசிய அளவில் பொறுப்புகள் தரப்படவுள்ளதாம்.

சுணக்கம்
இதற்காக நியமனம், பொறுப்புகளை உருவாக்கி அவைகளை சீனியர்களுக்கு வழங்கும்பட்சத்தில், வரப்போகும் எம்பி தேர்தலில், எந்தவித சுணக்கமுமின்றி இறங்கி வேலை பார்ப்பார்கள் என்றும் டெல்லி நம்புவதாக தெரிகிறது..
Recommended Video

தேர்தல்
எம்பி தேர்தலில் எப்படியாவது 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்கான வேலையை இப்பவே ஆரம்பிக்கும்படியும் பிரதமர் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், பாஜக மேலிடத்தின் குறி எம்பி தேர்தலை நோக்கி நகர தொடங்கி உள்ளது என்பது மட்டும் தெரிகிறது..!
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications