Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம ட்விஸ்ட்டு! ‘தஹி’ வேண்டாம்.. உடனே வாபஸ் வாங்குங்க.. முதல்வர் ஸ்டாலினுடன் கைகோர்த்த அண்ணாமலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, FSSAI தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தயிர் பாக்கெட் மீது 'தஹி' என இந்தி வார்த்தையை அச்சிடக்கோரி மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதியது. இந்த இந்தி திணிப்பு முயற்சியை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த அறிவுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தஹி

தஹி

FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், தயிர் பாக்கெட்டுகளில் இந்தி வார்த்தையை அச்சிட வேண்டும் என்று அறிவுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பால் கூட்டுறவு சங்கங்களான ஆவின், நந்தினி, பான்லே ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்யும் தயிர் பாக்கெட்கள் மீது 'தயிர்' என்று அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு பதிலாக 'தஹி' என்ற இந்தி சொல்லை எழுத வேண்டும் என அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்.

அரசியல் கட்சிகள் கொதிப்பு

அரசியல் கட்சிகள் கொதிப்பு

இதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தன. மாநில மொழிக்கு பதிலாக இந்தியை திணிப்பது எந்த வகையில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பலரும் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு, தயிர் பாக்கெட்டுகளில் 'தஹி' என்று அச்சிட முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

 ஸ்டாலின் சீற்றம்

ஸ்டாலின் சீற்றம்

இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து ட்வீட் செய்தார் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! இந்தி திணிப்பைக் கைவிடுங்கள்! குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளே வந்த அண்ணாமலை

உள்ளே வந்த அண்ணாமலை

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் கீழ் செயல்படும் FSSAI-ன் அறிவுறுத்தலை திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவரும் இதனைக் கண்டித்து, இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

அண்ணாமலை கடிதம்

அண்ணாமலை கடிதம்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, FSSAI தலைவர் ராஜேஷ் பூஷனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநில அரசு நிர்வகிக்கும் கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் மாநில மொழி வார்த்தைகளுக்குப் பதிலாக "தஹி" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI அறிவுறுத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எப்போதுமே மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. புதிய தேசிய கல்விக்கொள்கை, பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தியது.

உடனே திரும்பப் பெறவேண்டும்

உடனே திரும்பப் பெறவேண்டும்

நமது பிரதமர் மோடி உலக அரங்கில் பல மேடைகளில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பேசியுள்ளார். எனவே, கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் தயிர் பாக்கெட்டுகளில் "தஹி" என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக அந்த அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+