அண்ணாமலை யோசனையே தனி.. “D - டெங்கு.. M - மலேரியா.. K - கொசு”- திமுகவுக்கு புதிய விரிவாக்கம் சொல்றாரே
சென்னை: சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவுக்கு புதிய விரிவாக்கத்தை கொடுத்து இருக்கிறார் அண்ணாமலை.
சென்னையில் கடந்த சில நாட்கள் முன்பாக சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் சனாதனம். அதை அழிக்க வேண்டும்." என்று அவர் சாடினார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். குறிப்பாக பிரதமர் மோடியே இதுபற்றி நேற்று பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "சனாதன எண்ணம் கொண்டவர்களை இனப்படுகொலை செய்யச் சொன்னார் உதயநிதி' என்று பொய்யைப் பரப்பினார்கள். இத்தகைய பொய்யைப் பரப்புவதற்காக பா.ஜ.க.வினரால் திட்டமிட்டு வளர்க்கப்படும் சமூக வலைத்தள கும்பலானது, இதனை வட மாநிலம் முழுவதும் பரப்பியது. 'இனப்படுகொலை' என்ற சொல்லை தமிழிலோ, ஆங்கிலத்திலோ அமைச்சர் உதயநிதி எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஆனால் அப்படிச் சொன்னதாக பரப்பினார்கள்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஒருவர், அமைச்சர் உதயநிதியின் படத்தை எரித்து, 'தலைக்கு 10 கோடி' என்று விலை வைத்திருப்பதும் - அதனை பா.ஜ.க. ஆதரவு சக்திகள் பரப்புவதும்தான் இவர்களது பாணியா? சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய அமைச்சரவையே கூடி இருக்கிறது என்றால், இவர்கள்தான் பிற்படுத்தபட்ட - பட்டியலின - பழங்குடியின மக்களைக் காப்பற்றப் போகிறார்களா? பெண்ணினத்தை முன்னேற்றப் போகிறார்களா?
பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல. இந்தியா கூட்டணிக்குள் எப்படியாவது விரிசலை ஏற்படுத்திவிட முடியாதா என்ற அரசியல் கணக்கு. அனைத்து இந்துக்களும் அர்ச்சகர் ஆக முடியும் என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறோம். இந்தியாவிலேயே முதலில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுத்து, சனாதனம் மறுத்ததை சாத்தியம் ஆக்கியது திராவிட முன்னேற்றக் கழகம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "தமிழ்நாட்டில் இருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால் அது திமுகதான். D - Dengue, M - Malaria, K - Kosu. இனி வரும் காலங்கள் மக்கள் இந்த கொடிய நோய்களுடன் திமுகவை தொடர்புபடுத்துவார்கள் என்று நம்புவோம். தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு என்னுடைய மறுப்பு என்று குறிப்பிட்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
அதில் பேசியுள்ள அவர், "ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அறிக்கையையும், உங்கள் மகனின் அறிக்கையையும் பார்த்தோம். கடந்த 4 நாட்களாக நீங்கள் தோற்கும் சண்டையை போடுகிறீர்கள். இன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து பொய்களை பரப்புகிறீர்கள்." என்று பேசி இருக்கிறார். இதற்கு முன்னதாக அண்ணாமலை, "சனாதன தர்மத்திற்கு உதாரணம், 'அய்யா வைகுண்டர்' . 'முதலும் முடிவும் இல்லாத தர்மம்தான் சனாதன தர்மம்'. சனாதன தர்மத்தில் மட்டும்தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும் என்று சொல்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
Aavin: பச்சை நிற பால் பாக்கெட் விவகாரம்! பொய் தகவல் சொல்லும் ஆவின் நிர்வாகம்! அண்ணாமலை கண்டனம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
ரஜினி படத்தை எந்த அமைப்பும் பயன்படுத்தக் கூடாது.. ரசிகர் மன்றம் அதிரடி.. அண்ணாமலைக்கு வைத்த செக்? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications