உண்மையை பேச தயங்கும் தமிழகத்தில் உள்ளபடியே சொன்ன இளையராஜா.. தமிழக பாஜக ஆதரவு வீடியோ!
சென்னை: அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவாக தமிழக பாஜக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.
ப்ளூகிராப்ட் பதிப்பகத்தின் அம்பேத்கரும் மோடியும் என்று ஒரு நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அதில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார்.

அம்பேத்கர்- மோடி
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தார்கள். இதை ஒழிக்க இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவு கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

பதிலடி
அதற்கு பதிலடி தரும் விதமாக இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அம்பேத்கர், மோடி, இளையராஜா ஆகிய மூவரும் அடித்தட்டில் இருந்து வந்து உச்சம் தொட்டவர்கள் என குறிப்பிடப்பட்டு, முன்னுரையில் கூறப்பட்ட வாசகங்கள் ஒளிபரப்பப்பட்டன.

பாஜக வீடியோ
உண்மையை பேச தயங்கும் தமிழகத்தில் மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொன்ன இசைஞானி என்றும் ராஜா இளையராஜா என அந்த வீடியோ முடிகிறது. மற்றொரு வீடியோவில் எனக்கு கிடைத்த விருதின் வாயிலாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மக்களையும் தமிழகத்தையும் கவுரவிக்கிறது என நான் நினைக்கிறேன் என இளையராஜா சில ஆண்டுகளுக்கு முன் பேசிய பதிவு உள்ளது.
Recommended Video

இளையராஜாவுக்கு ஆதரவு
இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வீடியோக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இளையராஜாவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் எல் முருகன், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன?












Click it and Unblock the Notifications