கே.டி. ராகவன் ஆபாச வீடியோ.. ஸ்கெட்ச் போட்டு சிக்க வைத்த முயற்சியா.. ஒரே பரபரப்பு: 2021 FLASH BACK
கேடி ராகவன் வீடியோ விவகாரம் இந்த வருடம் மறக்க முடியாத பரபரப்பை ஏற்படுத்திவிட்டது
சென்னை: வருடங்கள் உருண்டாலும், சம்பவங்களும், அதன் நினைவுகளும் நம்மை விட்டு நீங்குவதில்லை.. அந்த வகையில் இந்த வருடம் பரபரப்பாக பேசப்பட்டது பாஜக சீனியர் தலைவர் கே.டி. ராகவன் வீடியோ விவகாரம் ஆகும்..!
பாஜவில் உள்ள முக்கிய தலைவர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் நிர்வாகிகள், பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஒரு புகார் ஆரம்பத்தில் இருந்தே எழுந்து வந்தது.. ஆனாலும், தலைவர்கள் மீதான புகார்களை விசாரிக்க தலைமை மறுத்து விட்டதாக சொல்லப்பட்டது.
அதனால்தான் பல பெண்கள், பயந்து போய் புகார் தர முன்வராமலேயே இருந்ததாகவும், அதையும் மீறி சிலர் தைரியமாக போலீசில் புகார் தந்த நிலையில், அந்த பெண் நிர்வாகிகள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டதாகவும் செய்திகள் அடிக்கடி கசிந்து வந்தன.

பொறுப்பு
எனினும், கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன் இந்த விஷயத்தில் முதன்முறையாக பகிரங்கமாகவே பொதுவெளியில் சிக்கினார்.. வேறு தலைவர்கள் புகாரில் சிக்கி இருந்தால், இந்த அளவுக்கு பரபரப்பு இருந்திருக்குமா என்று தெரியாது, ஆனால், டெல்லியிடம் நெருக்கம் காட்டும் நபர், மூத்த பாஜக தலைவர்களுடன் எந்த நேரமும் நல் நட்பிலும் தொடர்பிலும் இருந்த ராகவன் மீதே இப்படி ஒரு புகார் வந்ததால்தான் அன்றைய தினம் தமிழ்நாடு உட்பட தலைநகரமே அதிர்ச்சியில் உறைந்தது.

டார்ச்சர்
கட்சியில் உள்ள பெண்களிடம் எப்போது பேசினாலும், வீடியோ காலில் வர சொல்லி டார்ச்சர் தருவாராம் ராகவன்.. அப்படித்தான் அந்த பெண் நிர்வாகிக்கு வீடியோ காலில் டார்ச்சர் தந்ததாக சொல்லப்பட்டது.. வீடியோ காலில் பேசிய ராகவன், அரை நிர்வாணத்துடன் பூஜை அறை முன்பு உட்கார்ந்து பெண் நிர்வாகியிடம் ஆபாச சைகை செய்ததாக புகார் எழுந்தது.. இதைதவிர, பெண் நிர்வாகிக்கு ராகவன் அனுப்பியதாக வாட்ஸ் அப் மெசேஜ்களும் சில வெளியாகின.

அண்ணாமலை
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகிய அடுத்த சில நிமிடங்களிலேயே ராகவன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.. அதற்கு பிறகு டிவி விவாத நிகழ்ச்சிகளிலும் அவரை காணவில்லை.. எனினும், இந்த வீடியோவின் உண்மைதன்மை குறித்து ஆராய ஒரு குழு கட்சி சார்பில் அமைக்கப்பட்டது. மலர்கொடி தலைமையிலான குழுவினர், பெண் நிர்வாகியிடம் சம்பந்தப்பட்ட விசாரணை நடத்தியதாகவும், அடுத்து ராகவனிடமும் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டது.. ஆனால், அதற்கு பிறகு அந்த விசாரணை எந்த அளவில் இப்போது இருக்கிறது என்று தெரியவில்லை.

சர்ச்சைகள்
அதேசமயம், ராகவன் வீடியோ விவகாரம் தொடர்பாக எத்தனையோ யூகங்கள் ஒவ்வொரு நாளும் வெளியாகின.. பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் மதன் என்பவர்தான் தன்னுடைய யூடியூப் சேனலில் இந்த வீடியோவை வெளியிட்டதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் இந்த வீடியோ விவகாரத்தை கொண்டு சென்றதாகவும், அவர் ஆதாரம் இல்லாமல் ராகவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, உண்மையிலேயே உங்களிடம் இருந்தால் ஆதாரம் வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னதாகவும் மதன் அப்போது கூறியிருந்தார்.

விளக்கம்
ஆனால், அண்ணாமலை இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்து ஒரு நீண்ட விளக்கமும் அளித்திருந்தார்.. அதேபோல வேறு சில தகவல்களும் கூறப்பட்டன.. அதாவது மாநில பொதுச்செயலாளராக ராகவன் இருந்தாலும், கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள்யே வைத்திருந்தார்.. முக்கிய முடிவுகளை எடுப்பது, நிர்வாகிகள் நியமனம் எல்லாமே ராகவன் முடிவுப்படி நடந்ததாகவும், அதனால் கட்சி ரீதியாகவும்கூட இவர் மீது டெல்லியில் புகார் தர தமிழக நிர்வாகிகள் தயக்கம் காட்டியதாகவும் சொல்லப்பட்டது.. எனவே ராகவனை சிக்க வைக்க இதுவும் ஒரு காரணம் என்றார்கள்.
Recommended Video

காங்கிரஸ்
இந்த வீடியோ விவகாரத்தின் தாக்கம் மற்ற கட்சிகளிலும் எதிரொலித்தது என்றாலும் யாரும் இதை பெரிதாக்கவில்லை.. காங்கிரசின் ஜோதிமணி மட்டும் விஷயத்தை, இதை கண்டித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டார்.. டிஜிபி ஆபீசுக்கு சென்று நேரில் புகாரும் தந்தார்.. மற்றபடி ஒருத்தரும் வாய் திறக்கவில்லை.. அந்த சமயத்தில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சென்னையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது.. கே.டி.ராகவனை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அவருக்கு ஆதரவாக இருக்கும் சீமானுக்கு எதிராகவும் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது..

அழகிரி
ஆனால், இந்த விஷயம் தெரிந்து அந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி கோபப்பட்டாராம்.. ராகவன் விவகாரத்தை கையில் எடுப்பது தேவையற்றது என்று மேடையிலேயே நிர்வாகிகளை சத்தம் போட்டுள்ளார்.. கேஸ் விலை உயர்ந்து வரும் நிலையில் அதற்கு எதிராக போராடுமாறும் மகளிர் காங்கிரசாருக்கு அவர் அறிவுறுத்தியும் இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது. அதற்கு பிறகு ஜோதிமணியும் இந்த விஷயத்தில் சைலண்ட் ஆகிவிட்டார்.

பரபரப்பு
ஆக மொத்தம் ராகவன் வீடியோவில் உள்ளது உண்மைதானா? அல்லது அந்த வீடியோ பொய்யாக ஜோடிக்கப்பட்டதா? வேண்டுமென்றே அவரை சிக்க வைக்க நடந்த முயற்சியா? என்று தெரியவில்லை.. விசாரணை ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ராகவன் வீடியோ விவகாரம் இந்த வருடம் ஏற்படுத்திய பரபரப்பை அவ்வளவு எளிதாக மக்களால் மறந்து விட முடியாது..!
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!











Click it and Unblock the Notifications