இந்துக்களின் வாக்குகளுக்காக என்னவெல்லாம் செய்கிறார் பாருங்கள்.. திருமா.வை சீண்டும் பாஜக
திருமாவளவனுக்கு கேலி சித்திரம் வரைந்து தமிழக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னை: விபூதி, மாலை.. என பக்தி பழமாக காட்சியளித்த திருமாவளவனின் போட்டோவை வைத்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டு அவரை கேலி செய்துள்ளது.. இந்துக்களின் வாக்குகளுக்காகவே திருமாவளவன் இப்படி எல்லாம் செய்கிறார் என்றும் விமர்சித்துள்ளது.
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதற்கான வாக்கு சேகரிப்பிலும் அங்கு தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதனால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் சென்றார். அங்கு அவருக்கு அர்ச்சகர்கள் திரூநீறு பூசிவிட்டு, மாலை அணிவித்தனர். இதையடுத்து, நெற்றியில் பூசப்பட்ட விபூதியுடனேயே திருமாவளவன் அங்கிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

பக்திமயம்
அப்போது திருமாவளவன் நெற்றியில் திருநீறு, மாலை அணிந்து பக்திமயமாக காட்சி அளித்தார். இந்த விஷயம் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது. திருமாவளவன் ஒரு நாத்திகராக இருந்து கொண்டு கோயிலுக்கு சென்று, விபூதி பூசி வாக்கு கேட்டது அவரது சகிப்புத்தன்மையை காட்டுகிறது என்று ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிகின்றன.

தீட்சிதர்கள்
மற்றொரு பக்கம் "இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும் வகையில் கூட்டணி அமைத்துள்ளது திமுக. சனாதனத்தை வேர் அறுப்போம் என்று மாநாடு நடத்திய தொல் திருமாவளவன், இப்போது தில்லை சிதம்பரம் தீட்சிதர்களிடம் வாக்கு கேட்டு செல்லலாமா? ஓட்டுக்காக இப்படி நடந்து கொள்வதா?" என்று மற்றொரு பக்கம் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
லோக்சபா தேர்தலில் மகுடம் சூட போவது யார்? மக்கள் கணிப்பே வேறுதான்!
|
கேலி சித்திரம்
இந்நிலையில், திருமாவளவனை வைத்து பாஜக சம்பந்தமாக ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில், விபூதி பூசிய திருமாவளவன் புகைப்படத்தை வைத்து கார்ட்டூன் வரைந்து கேலி செய்துள்ளது. இந்துக்களின் வாக்குகளுக்காகவே திருமாவளவன் இவ்வாறு செய்கிறார் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.

ஐயா காப்பாத்துங்க
அன்று "சனாதனத்தை ஒழிக்க நாட்டில் உள்ள அனைத்து இந்து கோவில்களையும் இடித்து அகற்ற வேண்டும்" என்றும், "ஐயா இந்துக்களே! உங்க ஓட்ட எனக்கு போட்டு என்ன காப்பாத்துங்க ஐயா காப்பாத்துங்க" என்றும் கார்ட்டூனில் எழுதப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications