“சேலஞ்ச்” செய்த அண்ணாமலை.. வட மாநில தொழிலாளர் சர்ச்சை! மேலும் ஒரு தமிழக பாஜக நிர்வாகி பரபர ட்வீட்
அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. “திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்” என்று அவர் பதிவிட்டார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் கொல்லப்படுவதாகவும் பீகார் மாநில பாஜக, அங்குள்ள சமூக வலைதள பயனர்கள், வட இந்திய ஊடகங்கள் என வதந்திகளை பரப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில நிர்வாகி செல்வகுமாரும் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக பீகார் பாஜக ட்விட்டர் பக்கத்தில் வதந்தி பகிரப்பட்டு வட இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வட இந்தியாவின் பல முன்னணி ஊடகங்கள் இதனை செய்தியாக வெளியிட்ட நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஆதாரங்களுடன் இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.

பீகார் அரசு
தேசிய அளவில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் பாஜகவின் வேலை வதந்திகளை பரப்புவதே என்று விமர்சித்தார். இந்த நிலையில் நேற்று இதுதொடர்பாக விசாரிக்க பீகார் அரசு அமைத்த குழு தமிழ்நாட்டுக்கு வந்தது. அப்போது வதந்திகள் பகிரப்படுவதாக அந்த குழு விளக்கமளித்தது.

தனிப்படை அமைப்பு
இதனை தொடர்ந்து முகமது தன்வீர் என்பவர் மீதும், தூத்துக்குடி மாவட்டம் செண்ட்ரல் காவல் நிலையத்தில் பாஜகவை சேர்ந்த பிரசாந்த் உமராவ் என்பவர் மீதும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரின் பெயரில் தனிப்படை டெல்லி சென்றுள்ளது.

அண்ணாமலை கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, "உள்கட்டமைப்பு, உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் புலம்பெயர்ந்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் பங்களிப்பை தமிழ்நாடு பொது மக்கள் ஏற்றுக்கொள்ளவும் வரவேற்கவும் செய்கிறார்கள். ஆனால், வட இந்தியர்கள் பற்றி திமுக எம்பி மோசமான கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.

பானிபூரி வாலா
வட இந்தியர்களை திமுக அமைச்சர் பானிபூரி வாலா என்று அழைக்கிறார். திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை மக்களும் அரசும் காவல்துறையும் அங்கீகரிக்கவில்லை. திமுக எப்போதுமே பிளவுபடுத்தவும், அவர்களை பற்றி விமர்சிக்கவும் செய்கிறது. இப்போது இந்த சூழ்நிலையை சரிசெய்வது அவர்களின் பொறுப்பு." என்று கூறி உள்ளார்.

வழக்குப்பதிவு
இந்த நிலையில் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அண்ணாமலை, "வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்." என்றார்.

செல்வகுமார் ட்வீட்
இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தொழிற்பிரிவு மாநில துணைத் தலைவர் செல்வகுமார் இதுகுறித்து கருத்து தெரிவித்து உள்ளார். அதில், "திருப்பூர் நகரமே வெறிச்சோடி கிடக்கிறது. கடந்த வருடம் ஐரோப்பாவில் நிலவிய பொருளாதார மந்த நிலையால் பாதிக்கபட்ட ஆயத்த ஆடை ஏற்றுமதி இந்த மாதம் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கியது. இந்நிலையில் வட மாநில தொழிலாளர் பிரச்சனை.

வட மாநில தொழிலாளர்கள் கொலை
இது தமிழக உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வி. சென்னை, கோவை என சில இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தபட்டு சிலர் இறந்த போதே கவனம் செலுத்தியிருந்தால் கூட்டம் கூட்டமாக தொழிலாளர்கள் திரும்பி செல்வதை தவிர்த்து இருக்கலாம். மேலும் கடந்த மாதம் கோவை நீதிமன்ற வளாகத்தில் பட்டபகலில் நடந்த கொலை தொழிலாளர்கள் மத்தியில் பயத்தை கூட்டிவிட்டது." என்று கூறி உள்ளார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications