சீப்பை ஒளித்து வைத்தால் ஆச்சா.. மூல பத்திரம் எங்கே.. முரசொலி ஓனர் எங்கே.... விடாமல் விரட்டும் பாஜக!
முரசொலி பஞ்சமி நில விவகாரம் குறித்து பாஜக ட்வீட் பதிவிட்டுள்ளது
Recommended Video
சென்னை: முரசொலி ஓனர் எங்கே என்ற ஹேஷ்டேகுடன் கிளம்பி விட்டது பாஜக. பாஜகவின் ஐடி விங்கின் இந்த அதிரடி டிவீட்டுகள் வைரலாகி வருகின்றன.
திமுக -பாஜக இடையே இப்போது பஞ்சமி நிலத்தை வைத்து பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பாஜகவினர் ஒரு படி மேலே போய் தலித் ஆணையத்தில் புகாரும் கொடுக்க அது தொடர்பான விசாரணையும் நேற்று நடந்தது.
அப்போது அங்கு பாஜக வாய்தா கேட்க, திமுக டென்ஷனாகி விட்டது. புகார் கொடுத்தவர்களே வாய்தா கேட்கிறார்கள் என்றால் அவர்களிடம் ஆதாரம் இல்லை என்றுதானே அர்த்தம் என்று திமுக எகிற இப்போது மறுபடியும் பாஜக ஐடி விங் களமிறங்கி விட்டது.
|
ஆதாரம் இல்லை என்பதுதான் வழக்கு
பொய் சொன்னாலும் @arivalayam பொருந்த சொல்ல வேண்டும். திமுகவிடம் ஆதாரமே இல்லை என்பது தான் வழக்கே. *பத்திரிக்கையாளரிடமாவது ஆதாரத்தை காட்டி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காதது ஏன்? முரசொலி ஆதாரம் சமர்ப்பிக்க @udhaystalin வராமல் @rsbharathidmk
அனுப்பியது ஏன்?

ஓனர் எங்கே
அத்தோடு நிற்கவில்லை பாஜக. முரசொலி ஓனர் எங்கே என்று ஹேஷ்டேக்கையும் போட்டு விட்டுள்ளது. அதுதான் இப்போது வைரலாகியுள்ளது. இதேபோல அடுத்தடுத்து மேலும் 2 டவீட்டுகளையும் பாஜக போட்டுள்ளது.
|
சீப்பை ஒளித்து வைத்தால்
பாஜக போட்டுள்ள அடுத்த டிவீட்டில், ஆதாரம் கேட்டால் அவதூறு வழக்கு தொடர்வோம் என்று மிரட்டல் ஏன்?சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்ன? ஆதாரம் காட்டாமல், ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியது ஏன்? பின் நாங்கள் ஏன் ஆதாரம் சமர்ப்பிக்க கால அவகாசம் கேட்க வேண்டும்?
|
திமுகவுக்கு விதியா
3வது டிவீட்டில், வழக்கு தொடுத்தவரே ஆதாரம் சமர்பிக்க வேண்டும் என புலம்புவது திமுகவிற்கு விதியா? ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பவர்கள் நாளை நீதிமன்றம் விசாரிக்கவும் அதிகாரம் இல்லை என்று கூறுவார்களா? பட்டாவை காட்டியவர்களுக்கு மூலப்பத்திரத்தை காட்ட திராணி இல்லாதது ஏன்? என்று கேட்டுள்ளது.
இந்த டிவீட்டுகளுக்கு திமுக கொடுக்க போகும் பதிலடி என்னவோ..!
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications