சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பறந்து வந்த அசைன்மென்ட்.. டாப் கியர் போட்டு எகிறும் பாஜகவின் மூவ்கள்.. கலங்கும் அதிமுக.. கூல் திமுக

தமிழக பாஜக அதிமுகவை முந்திக் கொண்டு செல்வதாக கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சமீபகாலமாக, அதிமுகவை பின்னுக்கு தள்ளிக் கொண்டு பாஜக முந்தி வருவதாக கூறப்படுகிறது.. இதற்கு சில காரணங்களும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்பட்டு வருகிறது..!

தமிழக பாஜகவை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில்தான் உள்ளது.. 4 சீட்டுகளை கையில் வைத்திருந்தாலும், அதிமுகவை அவ்வப்போது சீண்டி வருகிறது.. எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறது.

எனவே, இவர்களுக்குள் இணக்கமான உறவு நீடிக்கிறதா? இதே கூட்டணி இனியும் தொடருமா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன..

பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி.. பாஜக பெரும் போராட்டம்.. திமுகவை விளாசும் அண்ணாமலை பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி.. பாஜக பெரும் போராட்டம்.. திமுகவை விளாசும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக மாநில தலைவர் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.. "நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி இடங்களில் அந்தந்த மாவட்டங்களில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்காக விருப்பமனு பெறப்படுகிறது.. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமாக இந்த தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சி குறித்து அறிவிக்கப்படும்... அப்போது தனித்து போட்டியா அல்லது கூட்டணி அறிவித்து போட்டியா என்று முடிவு செய்யப்படும். அதிமுக உடன் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறியுள்ளார்.

பாஜக

பாஜக

அண்ணாமலை இப்படி கூறியிருந்தாலும், உண்மையில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்ன கருத்துக்கள் இவைகள்தான்: "பாஜக தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறது போலும்.. ஒருபக்கம் அதிமுகவையும் அட்டாக் செய்து கொண்டு, மறுபக்கம் திமுகவுக்கும் செக் வைக்கும் வியூகத்தைதான் கையில் எடுத்து வருகிறது.. சில தினங்களுக்கு முன்பு அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார்..

அதிமுக

அதிமுக

அப்போது, "அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னேறுவதாக மக்கள் கருதுகிறார்கள்" என்று கூறியிருந்தார்.. இது அதிமுகவை டேமேஜ் செய்யும் பேச்சாகவே பார்க்கப்படுகிறது... ஆனால், பாஜக இப்படி பேசுவதற்கு அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலின் பலவீனமும் ஒருகாரணமாக இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.

 திமுகவுக்கு செக்

திமுகவுக்கு செக்

நடக்கிறதை எல்லாம் பார்த்தால், இத்தனை காலமாக திமுக Vs அதிமுக என்றிருந்த அரசியல் களத்தை, திமுக Vs பாஜக என்று மாற்றி காட்டவே, டெல்லி மேலிடம் முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.. சுருக்கமாக சொன்னால், திமுகவுக்கு போட்டியாக பாஜக மட்டுமே தமிழகத்தில் இருக்க வேண்டும், அதன்மூலம் திமுகவுக்கு எதிரான பலம்பொருந்திய கட்சியாக தங்களை காட்டிக் கொள்ளும் சூட்சுமமாகவே இது கருதப்படுகிறது.. அதற்கேற்படி டெல்லி மூவ்களும் அப்படித்தான் இருக்கிறது.

அப்செட்

அப்செட்

கடந்த வாரம்கூட, மத்திய அரசுக்கு நெருக்கமான 2 பேர் தமிழகம் வந்து போனதாக தெரிகிறது.. அதிமுகவில் யாரெல்லாம் அதிருப்தியில் அப்செட்டில் உள்ளார்களோ, அவர்களை எல்லாம் பாஜக பக்கம் இழுத்து வர சில ஐடியாக்களை தந்துவிட்டு போனார்களாம்.. அதிமுக மட்டுமல்ல, திமுக உட்பட மாற்று கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களை, பாஜகவுக்கு கொண்டு வர முனைப்பு காட்டி உள்ளார்களாம்.. இது மற்ற கட்சிகளில் எடுபட்டாலும், திமுகவில் எடுபட வாய்ப்பே இல்லை.. திமுக அந்த அளவுக்கு ஸ்ட்டிராங்காக உள்ளது.

செலவு

செலவு

அதுமட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி செலவு செய்யுமா என்ற சந்தேகம் உள்ளது.. அதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு தேவைப்படும் நிதியை டெல்லியிருந்து திரட்டவும் தமிழக பாஜக மேலிடத்தில் பேசியுள்ளதாக தெரிகிறது.. அப்படி மேலிடம் செலவு செய்தால், நடக்க போகும் தேர்தலில் பாஜக தன்னுடைய பலத்தை மேலும் நிரூபிக்க உதவியாக இருக்கும்.

அறிக்கை

அறிக்கை

சுருக்கமாக சொன்னால், திமுகவுக்கு நேரடியாகவே செக் வைத்துக் கொண்டே, அதிமுகவை மறைமுகமாக கரைக்கும் செயலில் தமிழக பாஜக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.. மிக குறுகிய காலத்தில் பாஜகவின் முக்கிய முன்னெடுப்பாகவே இது பார்க்கப்பட்டாலும், உடனடியாக அதிமுக விழித்து கொண்டால் நல்லா இருக்கும்" என்று சொல்லி முடித்து கொண்டனர்.

English summary
TN BJPs next move in Urban Local body election and what will admk do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X