அப்படி என்ன குறைதாண்டா பட்ஜெட்ல இருக்கு.. வெளிநடப்பு ஏன்..வைரலாகும் மீம்ஸ்
சென்னை தமிழகத்தின் பட்ஜெட் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதுபற்றிய சில மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. அது ஒரு மீம்ஸ் வெளிநடப்பு பற்றியது. அந்த மீம்ஸ் சமுக வலைதளங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் 2021-22ம் ஆண்டுக்கான திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக பெட்ரோல் மீதான வரி உடனடியாக 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை தமிழகத்தில் 3 ரூபாய் குறைந்தது.
இதேபோல் இந்த முறை பட்ஜெட்டில் பதுமையாக வேளாண் பட்ஜெட் (ஆக.14ல்) இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பனை மரத்தை வெட்ட கலெக்டரின் அனுமதி தேவை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் சூரியசக்தி மின்மோட்டார்கள் விவசாயிகளுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

பாராட்டு
இதனிடையே பட்ஜெட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதை குறிப்பிட்டு பாராட்டி சிலர் மீம்ஸ் போட்டு வருகிறார்கள். இன்னும் சிலார் பட்ஜெட்டில் எதுவுமே இல்லை, ஓவர் பில்டப் என்று கூறியும் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

சட்டசபை
ஆனால் குறிப்பிட்ட இரண்டு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றை மட்டும் இப்பாது பார்ப்போம் . எதிர்க்கட்சிகள் சட்டசபையில் வெளிநடப்பு செய்ததை வைத்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது .

கம்ப்யூட்டர்
குறிப்பிட்ட அந்த மீம்ஸில அப்படி என்ன குறைதாண்டா பட்ஜெட்ல இருக்கு வெளிநடப்பு செஞ்சிட்டுவந்துருக்க சொல்லி தொலையேன்டா என்று ஒரு தாய் கேட்பது போல் உள்ளது. அதற்கு மீம்ஸில் வரும் மம்முட்டி, சொன்னா தாங்கமாட்டீங்க எனக்கு கம்யூட்ட ஆப்ரேட் பண்ண தெரியாது என்பார். அதாவது இந்த முறை கம்ப்யூட்டரில் பட்ஜெட்டை படிக்கும் வண்ணம் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை குறிப்பிட்டு தான் இப்படி மீம்ஸ் போட்டிருந்தார்கள்.

ஏமாற்றம்
இன்னொரு மீம்ஸில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கருத்தை வைத்து கூறியிருந்தனர். கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும் பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பவைக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது என்று கூறியிருந்தார்.

பிக்பாஸ்
கமலின் அந்த ட்விட்டிற்கு கீழ் கார்த்திக் முருகேசன் என்பவர், அஞ்சு வருசம் இருக்குல்ல ஆண்டவரே, ஒவ்வெண்ணா பண்ணுவாங்க.. உதாரணமாக பிக்பாஸ்ல முதல் நாளே எல்லா டாஸ்கயும் கொடுத்துட்ட மிச்ச 99 நாள் வேஸ்ட் ஆயிடும்ல ,, அந்த மாதிரி என்று கூறியிருந்தார். அதை மீம்ஸ் ஆக வடிவமைத்து பரப்பி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications