பள்ளிக் கல்வித்துறைக்கு கொட்டிக் கொடுத்த தமிழக பட்ஜெட்: துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூபாய் 46,767 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறைக்கு 8,494 கோடி ரூபாயும், நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
2025-2026 ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விவரம்:
* பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி
* உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி
* இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.572 கோடி
* நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.26,678 கோடி
* ஊரக உள்ளாட்சிக்கு ரூ.29,465 கோடி
* நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,722 கோடி
* மின்சாரத் துறைக்கு ரூ.21,178 கோடி
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி
* போக்குவரத்துத் துறைக்கு ரூ.12,964 கோடி
* நீர்வளத் துறைக்கு ரூ.9,460 கோடி
* சமூகநலத் துறைக்கு ரூ.8,597 கோடி
* ஆதி திராவிடர் பழங்குடியினர் துறைக்கு ரூ.3,924 கோடி
* தொழில் துறைக்கு ரூ.5,833 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்
* வரும் நிதி ஆண்டில் 40 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த 4 ஆண்டுகளில் 78 ஆயிரம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
* இலங்கை தமிழர் நலனுக்காக 3 ஆயிரம் வீடுகள் ரூ.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி ஆகிய பகுதிகளில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு
* பழமையான தேவாலயம், தர்காக்களை புதுப்பிக்க தலா ரூ.10 கோடி.
* புராதான கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி.
* 50 சார் பதிவாளர் அலுவலகங்கள் ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும்.
* மாநில அரசின் ஆண்டு வரி வருவாய் 14.6 சதவீதம் வளர்ச்சி பெறும்.
* வரும் நிதியாண்டில் மாநில வரி வருவாய் 2.21 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
* வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாகுறை விகிதம் குறையும்.
* 5 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் மீண்டும் வழங்கப்படும்; 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.
* அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
முதல்வர் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6,100 கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம சாலைகள் 2,100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
* அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
* அரசுப் பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் (Centre of Excellence) ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்படும்.
* நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளும், உலக அளவிலான QS தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள்ளும் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம்பெறச் செய்திடச் செயல்திட்டம் உருவாக்கப்படும்.
பத்து லட்சம் வரை மதிப்புள்ள அசையா சொத்துகளைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 1% பதிவுக் கட்டணம் குறைக்கப்படும்.
* அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாள்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்.
* நகர்ப்புறப் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய திட்டம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.
* ரூ.150 கோடியில் புராதானக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்
* திருவான்மியூர் - உத்தண்டி நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை 14.2 கி.மீ நீளம்
* ரூ.2,100 கோடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும்.
* ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications