ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் மாணவர்களுக்கு சைக்கிள்கள்.. அமைச்சரின் மாஸ் அறிவிப்பு!
சென்னை: 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இனி ஹெல்மெட், தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கப்படும் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்திருக்கிறார்.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த நவீன சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

மாணவர்களுக்கு சைக்கிள்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த 2001-2002ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் பயிலும் பட்டியலின சமூக மாணவர்களுக்கு மட்டுமே சைக்கிள் வழங்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் 2005-2006ம் ஆண்டு இந்த திட்டம் அனைத்து மாணவர்களுக்கானதாக விரிவுப்படுத்தப்பட்டது.
இதற்காக ஏவோன் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்களிடமிருந்து சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. ஆனால், இலவசமாக வழங்கப்படும் சைக்கிள் என்பதால், அதில் ஏராளமான குளறுபடிகள் இருந்தன. சைக்கிள்களை வாங்கிய உடன் அப்படியே பயன்படுத்த முடியாது. ரூ.200-300 வரை செலலு செய்து சர்வீஸ் செய்தால்தான் அதை இயக்க முடியும்.
இப்படி இருக்கையில் இனி மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications
