நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. ரூபி மனோகருக்கு அடிச்சது ஜாக்பாட்

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் யார் என்று இன்று இரவுக்குள் தெரிந்துவிடும்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக நா புகழேந்தி.. ஸ்டாலின் அறிவிப்பு-வீடியோ

    சென்னை: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எப்படி எப்படியோ மல்லுக்கட்டி திமுகவிடம் நாங்குநேரியை காங்கிரஸ் வாங்கிவிட்டது. அடுத்ததாக வேட்பாளர் யார் என்ற சிக்கல் எழுந்துள்ளது. தொகுதிக்குள் பணத்தை செலவு செய்யும் அளவுக்கு வேட்பாளர் தேவை என்ற நிர்ப்பந்தம், எழுந்துள்ளது. அதே சமயம், தொகுதிக்குள் மண்ணை கவ்விட கூடாது என்ற நெருக்கடியும் எழுந்துள்ளது.

    Urvashi Amirtharaj may be declared the Nanguneris candidate

    எனினும், இதற்கான நேர்காணல் நடந்து முடிந்தது. பல கோஷ்டி உள்ள காங்கிரஸில் ஏராளமானோர் மனு தாக்கல் செய்திருந்தனர். எனினும் கடைசியாக 3 பேர் கொண்ட பட்டியல் ஓகே ஆனது. அதில், மூத்த தலைவர் குமரி அனந்தன், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    Urvashi Amirtharaj may be declared the Nanguneris candidate

    இந்த பட்டியலை எடுத்து கொண்டு கேஎஸ் அழகிரி டெல்லி சென்றிருக்கிறார். அவருடன், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், வசந்தகுமார் உள்ளிட்ட பலரும் டெல்லிக்கு கிளம்பி உள்ளார்கள். அது மட்டுமில்லை, சீட் கேட்டு நேர்காணலில் கலந்து கொண்ட பலரும் இவர்களுடன் படையெடுத்து இருக்கிறார்களாம்.

    வேட்பாளர் தேர்வு சம்பந்தமாக கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதில் இறுதி செய்யப்பட்ட 3 பேர் பெயருடன் பரிந்துரை கடிதத்தையும் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    எப்படியும் சோனியாதான் 3 பேரில் ஒருவரை வேட்பாளராக இறுதி செய்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. அதனால் இன்று இரவே நாங்குநேரியின் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதில், ரூபி மனோகருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம் ரூபி மனோகர் தான் நாங்குநேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+