SIR: இடம் மாறிய வாக்காளர் படிவங்கள் ஏற்கப்படுமா? யாருடைய பெயராவது நீக்கப்படுமா? அர்ச்சனா விளக்கம்
சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் யாருடைய பெயராவது நீக்கப்படுமா என்ற கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50 சதவீதம் வரை திரும்ப பெறப்பட்டுள்ளன. எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அப்படி நீக்கப்பட்டால் அதற்குரிய காரணம் தெரிவிக்கப்படும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான்
68,647 பிஎல்ஓக்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் பேர் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான பிஎல்ஓக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
96 சதவீதம்
சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது 5 பிரிவுகளில் தெளிவாக வெளியிடப்படும். எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 4ஆம் தேதிதான். அதை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றார்.
பீகார் வாக்காளர்கள்
தமிழகத்தில் அதிகளவு பீகார் வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக வைக்கப்படும் புகாருக்கு தேர்தல் அதிகாரி அர்ச்சனா கூறுகையில், தமிழகத்தில் வசிக்கும் பீகார் மாநிலத்தவர்கள் 869 பேர் தமிழகத்தில் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என பதில் அளித்துள்ளார்.
பிஎல்ஓ
அவர் மேலும் கூறுகையில் ஒரு குறிப்பிட்ட கட்சி மட்டும் படிவங்களை வாங்குவதாகக் குற்றச்சாட்டு வைப்பது தவறானது. பிஎல்ஓவுடன் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்கள். ஒரு வேளை எங்காவது இப்படி நடந்தால் புகார் கொடுக்கலாம். தகுதியான எந்த வாக்காளர்களும் விடுபடமாட்டார்கள்.
இணையதளத்தில் வெளியாகும்
இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், படிவத்தை திருப்பி தராதவர்கள், படிவத்தை வாங்காதவர்கள் தொடர்பான விவரங்கள் தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
சட்டசபை தொகுதி
ஒரு சட்டசபைத் தொகுதிக்குள் வாக்காளர்கள் இடம் மாறியிருந்தால் அவர்களின் படிவம் ஏற்கப்படும். வேறு பேரவைத் தொகுதிக்கு வாக்காளர் சென்றிருந்தால் அவர்கள் பழைய இடத்தில் விண்ணப்பிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்ஐஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டு படிவங்களில் தகவல் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது என அர்ச்சனா ஐஏஎஸ் தெரிவித்திருந்தார்.
பீகார் சட்டசபை தேர்தல்
பீகார் சட்டசபைத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் இறந்தவர்கள், குடியிருப்பு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தன.
ஆலோசனை
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவித்தார். அதை தொடர்ந்து இந்த பணிகள் தொடர்பான தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications