டெல்லி பறக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மோடி 3.0 ஆட்சியில் நடக்கப்போகும் முதல் மீட்டிங்!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்க இருக்கிறார்.
பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் வரும் 27 ஆம் தேதி நிதி ஆயோக் முதல் கூட்டம் நடைபெறுகிறது. நிதி ஆயோக் அமைப்பை சீரமைத்து மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைவராகவும், பொருளாதார நிபுணர் சுமன் கே பெரி தொடர்ந்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவராகவும் தொடர்ந்து வருகின்றனர். விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், விவசாயப் பொருளாதார நிபுணர் ரமேஷ் சந்த், குழந்தை நல மருத்துவர் வி.கே.பால் மற்றும் மேக்ரோ பொருளாதார நிபுணர் அரவிந்த் விர்மானி ஆகியோர் அரசாங்க சிந்தனைக் குழுவின் முழுநேர உறுப்பினர்களாகத் தொடர்கின்றனர்.
பிவிஆர் சுப்ரமணியம் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நிதி ஆயோக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜேபி நட்டா, எச்.டி.குமாரசாமி, ஜிதன் மஞ்சி ராம், லாலன் சிங் வீரேந்திர குமார், ஜுவல் ஓரம், அன்னபூர்ணா தேவி, சிராக் பஸ்வான், கிஞ்சிரப்பு ராம் மோகன் நாயுடு, ராவ் இந்தர்ஜித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வரும் ஜூலை 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அவரைச் சந்திக்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது தமிழ்நாட்டு நலன் சார்ந்து முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
-
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications