செல்வராகவனுக்கு ‘திடீர்’ சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்.. ‘ஸ்பெஷல் மீட்டிங்’.. நெகிழ்ச்சி!
சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலின், திடீரென முன்னணி இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்று இரவு திடீரென சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
தங்கள் வீட்டிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வந்தது என்னவொரு சிறப்பான தருணம் என இயக்குநர் செல்வராகவன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினுடன், தனது குடும்பத்தினர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் செல்வராகவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

முதல்வர் திடீர் விசிட்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவனின் வீட்டிற்கு நேற்று இரவு திடீரென சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினரோடு பேசிவிட்டு, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தோடு
செல்வராகவன் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோரின் தந்தை இயக்குநர் கஸ்தூரி ராஜா, அவரது மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் உள்ளனர். இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள செல்வராகவன், தமிழக முதல்வர் எங்கள் வீட்டிற்கு வருகை தந்தது என்னவொரு சிறப்பான தருணம் எனப் பதிவிட்டுள்ளார்.

சர்ப்ரைஸ் சம்பவம்
இயக்குநர் செல்வராகவன் வெளியிட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் திடீரென செல்வராகவன் வீட்டுக்கே சென்று செல்வராகவன் குடும்பத்தினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து நடித்து வரும் செல்வா
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் தற்போது தனுஷ் நடிப்பில், 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாணிக்காயுதம், பீஸ்ட் ஆகிய படங்களை தொடர்ந்து இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் செல்வராகவன். மேலும் மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார் செல்வராகவன்.

இப்படிப்பட்ட ஒரு முதல்வர்
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பங்கேற்ற செல்வராகவன், "எனக்கு சிறுவயதிலிருந்தே மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும். இப்படிப்பட்ட ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வர மாட்டாரா என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். 'மக்கள் முதல்வர்' என்றால் அது முதலமைச்சர் ஸ்டாலின் தான். நமது தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நம் முதலமைச்சரால் தான் முடியும்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications