முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற வேண்டுமா? இதுதான் தகுதி மக்களே!
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்..
தமிழக அரசை பொறுத்தவரை, மக்களின் நன்மைகளையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தை சொல்லலாம்...

உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், "முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் 23.09.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சுமார் 1.44 கோடி குடும்பங்கள் (ஜனவரி 2022 முதல்) பயன்பெற்று வருகிறார்கள்.
ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன், உயிர்காக்கும் உயிர் சிகிச்சைக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம்.

குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 300-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை பெறலாம். தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற பயனாளிகளுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும்? என்பது பற்றி பார்க்கலாம்..
* ஆண்டு வருமானம் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
* குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இதில் பயன் பெறலாம்.
* முதலமைசரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications