எதுவும் பிரச்சனை இருக்கா? கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அதிரடி ஆய்வு நடத்திய தலைமை செயலர்!
சென்னை: கிளாம்பாக்கத்தில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் கேட்டறிந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. அப்போது முதல், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி வருகின்றன. முன்பு கோயம்பேட்டில் இருந்து கிளம்பி வந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு வருகின்றன.
புதிய பேருந்து நிலையம் என்பதால், பொதுமக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். பயணிகளின் சிக்கல்களை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பேருந்துகளில் தென் மாவட்டங்களுக்குப் பயணிக்க வந்த பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் வைக்கப்பட்டு இருந்த குடிநீரை அருந்திய சிவ்தாஸ் மீனா, பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கிறதா என பயணிகளிடம் விசாரித்தார். பயணிகள் சொல்லும் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications