கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும்...குட் நியூஸ் சொன்ன எடப்பாடி பழனிசாமி!
சென்னை: கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஒருநாள் பயணமாக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முன்னதாக இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- முதலில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். பிரதமர் தொடங்கி வைக்கும் திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

பிரதமருக்கு நன்றி
பிரதமரின் மோடியின் நடவடிக்கையால் இந்தியாவில் கொரோனா தொற்று குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் தமிழகத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா காலத்தில் தமிழக அரசின் பணிகளை பாராட்டிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ததற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கோவையில் மெட்ரோ ரெயில்
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த உறுதுணையாக இருந்த மத்திய அரசுக்கு நன்றி கூறுகிறோம். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இதற்கான ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

குடிமராமத்து திட்டம் வெற்றி
தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழரின் பொறியியல் பெருமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. நீர்மேலாண்மையில் மத்திய அரசின் விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications