சென்னையில் 120 மின்சார பேருந்துகள்.. மகளிருக்கு கட்டணம் எவ்வளவு? எந்தெந்த ரூட்களில் ஓடுகிறது? விவரம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 120 மின்சார தாழ்தள பேருந்து சேவைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் எந்தெந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது?, கட்டணம் எவ்வளவு, பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியுமா?, பேருந்தில் உள்ள வசதிகள் என்னென்ன? என்பனவற்றை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் 120 மின்சார பேருந்துகள் சேவையை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில் உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பங்களிப்புடன் ரூ.697 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக வியாசர்பாடி, பெரும்பாக்கம், மத்திய பணிமனை, தண்டையார்-1, பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் மின்சார பஸ் பணிமனைகளை அமைத்து 625 தாழ்தள மின்சார பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக அரசின் போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில்தான் இன்று முதல் கட்டமாக 120 பேருந்துகள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் எந்த ரூட்டில் ஓடும் என்ற விவரங்களை பார்க்கலாம்.

கட்டணம் எவ்வளவு?
* மின்சார பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய முடியாது. அதாவது, இந்த பேருந்துகள் 'விடியல் பயண திட்டத்தின் வரம்புக்குள் கொண்டு வரப்படவில்லை என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே பெண்கள் 'டிக்கெட்' இல்லாமல் பயணிக்க முடியாது.
* மாநகர தாழ்தள சொகுசு பேருந்துகளில் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணமே மின்சார பேருந்துகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பஸ்கள் இயக்கம், பராமரிப்பை 'அசோக் லேலண்ட்' நிறுவனத்தின் ஓம் குளோபல் மொபிலிட்டி' நிறுவனம்தான் மேற்கொள்ள உள்ளது.
பேருந்தில் உள்ள வசதிகள்:
* மின்சார பேருந்துகளில் ஒவ்வொரு இருக்கைகளுக்கும் கீழே ஒரு சார்ஜர் வசதி உள்ளது. பயணிகள் தங்கள் மொபைல்களை இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
* அனைத்து இருக்கைகளிலும் சீட் பெல்ட் போடப்பட்டுள்ளது. பயணிகள் பாதுகாப்பு கருதி ஒரு பின்புற கேமரா உள்பட 7 கேமராக்கள் உள்ளன.
* பேருந்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதுபோல, பேருந்து நிறுத்தம் தொடர்பான தகவல்களை பயணிகள் பேருந்தில் உள்ள டிஜிட்டல் திரை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
* மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 6 இருக்கைகள் உள்ளன. அவர்கள் சிரமமின்றி பேருந்தில் ஏறும் வகையில் மடக்கும் வசதி கொண்ட சாய்வுதள படிக்கட்டும் உள்ளது. அதாவது தற்போது தாழ்தள சொகுசு பேருந்துகளில் உள்ள வசதி இந்த பேருந்திலும் இடம் பெற்றுள்ளது.
* பேருந்துகளில் இரண்டு எமர்ஜென்சி எக்ஸிட்கள் உள்ளன. 2 மணி நேரம் 'சார்ஜிங்' செய்தால் இந்த பேருந்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.
எந்த வழித்தடங்களில் இயக்கப்படுகிறது?
வியாசர்பாடி பணிமனையில் இருந்து இயக்கப்படும் 120 தாழ்தள மின்சாரப் பேருந்துகளின் வழித்தடங்கள்:
2B (சுற்று பேருந்து) கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர்
* இந்த வழித்தடத்தில் 10 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* வழி: சிட்கோ,மகாகவி பாரதி நகர், சத்தியமூர்த்தி நகர், ரீகள், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணா சதுக்கம், கண்ணகி சிலை, அரசினர் தோட்டம் மெட்ரோ, சென்ட்ரல் ரயில் நிலையம், ரீகல், வியாசர்பாடி, மகாகவி பாரதி நகர், சிட்கோ
18A - பிராட்வே - கிளாம்பாக்கம்:
* இந்த வழித்தடத்தில் மொத்தம் 20 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* வழி: சென்ட்ரல் ரயில் நிலையம், அரசினர் தோட்டம் மெட்ரோ, அண்ணா சாலை, டி.வி.எஸ், டி.எம்.எஸ், நத்தனம் S.H.B, சைதாப்பேட்டை, கான்கோட் கிண்டி எம் கே என் சாலை, சென்ட் தாமஸ் மவுண்ட் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம். திரிசூலம் விமான நிலையம், பல்லாலரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் மேற்கு இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் கேட் வண்டலூர்.
C33 - (சுற்று பேருந்து) கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர்
* 5 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* வழி: சிட்கோ,.சு.பா.கம், வியாசர்பாடி, வள்ளலார் நகர், சிளை பேட்டரி, பாரிமுனை, பிராட்வேஎம்.ஜி.ஆர், சென்ட்ரல் ரயில் நிலையம், சூளை 8.B. P1.புளியந்தோப் காவல் நிலையம், பெரம்பூர் மார்க்கெட் மூலக்கடை, சிட்கோ
C64 - (சுற்று பேருந்து) கவியரசு கண்ணதாசன் நகர் - கவியரசு கண்ணதாசன் நகர்
* 5 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* வழி: சிட்கோ, மூலக்கடை பெரம்பூர் மார்க்கெட், ஜமாலியா, P1.புனியந்தோப்பு காவல் நிலையம், சூளை பி.ஐ. எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, பாரிமுனை, சில்ை பேட்டரி, வள்ளலார் நகர், வியாசர்பாடி, ம.க.பா.நகர் சிட்கோ
37 - பூந்தமல்லி - வள்ளலார் நகர்
* 10 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
* வழி: குமணஞ்சாவடி ஐயப்பன்தாங்கல், போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனணி, டிரஸ்ட்புரம். கால்நடை மருத்துவமனை, ஸ்டெர்லிங் சாலை, கே.எம்.சி. மோட்சம் தியேட்டர், சூளை இ.து., ரீகஸ்
46G - மகாகவி பாரதி நகர் பே.நி - கோயம்பேடு
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* வழி: அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி அண்ணா நகர் கிழக்கு, கம்பர் அரங்கம், சயனி/அயனாவரம் ஜமாலையா, பெரம்பூர், வியாசர்பாடி
57 - வள்ளலார் நகர் - செங்குன்றம்
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* வழி: வியாசர்பாடி, சர்மா நகர், மூலக்கடை, கல்பனா லாம்ப், சைக்கிள் கடை, காவாங்கரை, ஆயுர்வேதா ஆசிரமம்.
57X - வள்ளலார் நகர் - பெரியபாளையம்
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* வழி வியாசர்பாடி, சர்மா நகர், மூலக்கடை, கல்பனா விளக்குகள், சைக்கிள் கடை, காவாங்கரை, ஆயுர்வேதா ஆசிரமம், செங்குன்றம். பல்லூர், செமிலிவரம், சோழவரம், காரனோடை, பெரியபாளையம் ஆர்டி ஜே.என்., சக்தி விகாயகர் கோயில், பாண்டி காலனூர் சந்திப்பு மஞ்சங்கரணை, கன்னிகைப்பெயர், தர்மபுரம் கண்டிகை, செயபுரம், ஆவடி சாலை சந்திப்பூ, பெரியபாளையம்
164E - பெரம்பூர் - மணலி
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* வழி:மண சேக்காடு, மாதவரம் பால் காலனி, மாதவரம் தபால் பெட்டி, மூலக்கடை, பெரம்பூர் மார்க்கெட், பெரம்பூர் பே.சி.
170TX - மகாகவி பாரதி நகர் - கிளாம்பாக்கம் பே.நி
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* வழி: கவியரசு கண்ணதாசன் நகர், சிட்கோ, மூலக்கடை கல்பனா லாம்பு/மாதவரம், பஸ் பே-17வது கி.மீ. மல்லிகை நகர், வாட்டர் பைப் தாதன்குப்பம், வீல்ஸ் இந்தியா சாலை சக்திப்பு, திருமங்களம், கோயம்பேடு பள்ளி, எம்.எம்.டி.ஏ காலனி சாலை சக்திப்பு III மற்றும் IST AVE., ஜாபர்கான்பேட்டை, CIPET, சென்ட் தாமஸ் மவுண்ட், மீனம்பாக்கம், பழைய விமான நிலையம். திரிசூலம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் மேற்கு இரும்புலியூர், பெருங்களத்தூர், வண்டலூர் கேட் வண்டலூர்
170C -திரு.வி.க நகர் - கிண்டி திரு.வி.க எஸ்டேட்
* 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
* எஸ்.ஆர்.பி.காலனி கொளத்தூர், ரெட்டேரி அம்பேத்கர் நகர், தாதன்குப்பம், வில்ஸ் இந்தியா சாலை சந்திப்பு, திருமங்கலம், கோயம்பேடு சத்திரம், எம்.எம்.டி. காலனி சாலை சக்திப்பு 3வது மற்றும் 2வது அவென்யூ, ஜாஃபர்கான்பேட்டை கிண்டி சிபெட்.
-
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
வணிக காஸ் சிலிண்டர் ரூ.5000, 6000 என விற்பனை.. சென்னை,கோவையில் மூடப்படும் ஏராளமான உணவங்கள் -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
சென்னை மாதவரத்தில் 46 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications