திரைவானின் சூரியன் நீங்கள்! தாதா சாகேப் ரஜினிக்கு முதல்வரின் செம பாஸ்ட் வாழ்த்து!
சென்னை: இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதாகும். சினிமா துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வருடம்தோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
Recommended Video
2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது.

தாதா சாகேப் பால்கே விருது
இந்த நிலையில் தற்போது கொரோனா குறைந்து விட்டதால் டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் நடிகர் ரஜினிகாந்த் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். ''தாதா சாகேப் பால்கே விருது எனக்குக் கிடைத்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை

நடிகர் ரஜினிகாந்த பெற்றார்
இந்த நேரத்தில் கே.பாலசந்தர் சார் இல்லையே என்று வருத்தமாக உள்ளது'' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி இருந்தார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு தலைநகர் டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார் இதனால் அவரை தமிழ் திரையுலகத்தினர் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ''திரைத்துறையின் உயரிய விருதான #DadasahebPhalkeAward பெறும் அன்பு நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார்.

தமிழ் மக்களே காரணம்
''என்னைக்கண்டுபிடித்த வழிகாட்டி பாலச்சந்தர் சார், எனக்கு நடிக்கவரும் என்பதை கண்டுபிடித்து உதவிய நண்பர் ராஜ்பகதூர், அண்ணன் சத்யநாராயணனுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன். விருது பெற தமிழ் மக்களே காரணம்'' என்று விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications