Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டேன் சுவாமி மரணம்... இரங்கல்தானா? பாஜகவுக்கு கண்டனம் இல்லையா முதல்வர் ஸ்டாலின்? குவியும் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி சிறையிலேயே மரணம் அடைந்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த மரணத்துக்கு காரணமாக மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் வன்மையாக கண்டிக்கவில்லையே என்கிற ஆதங்கத்தை அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

கி.பி. 1818-ல் மகாராஷ்டிராவின் பீமாகோரேகானில் ஒரு யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தமானது ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கமெப்னியில் இருந்த மகர்கள் எனப்படும் தலித்துகளுக்கும் மகாராஷ்டிரா பிராமணர்களின் படையான பேஷ்வாக்களுக்கும் இடையே யுத்தமாக நிகழ்ந்தது. 800 மகர்களைக் கொண்ட தலித் படையானது 20,000 பிராமணர்களை கொண்ட பேஷ்வா படையணியை தோற்கடித்தது. இந்த யுத்தத்தின் நினைவாக பீமாகோரேகானில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு பீமாகோரேகான் யுத்தத்தின் 200-ம் ஆண்டை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெரும் வன்முறை வெடித்தது. இந்நிகழ்வுக்கு முன்னதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி 200 தன்னார்வ அமைப்புகள் இணைந்து எல்கர் பரிஷத் நிகழ்வை நடத்தின. இதில் 30,000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களே 2018 பீமாகோரேகான் வன்முறைக்கு காரணம்; எல்கர் பரிஷத் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மாவோயிஸ்டுகள் என்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றச்சாட்டு.

ஸ்டேன் சுவாமி மரணம்

ஸ்டேன் சுவாமி மரணம்

எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதற்காக கடந்த ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிகளிடையே மக்கள் பணி ஆற்றி வந்த 83 வயது திருச்சி பாதிரியார் ஸ்டேன் சுவாமியும் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமிக்கு 8 மாதங்களாக ஜாமீன் வழங்கப்படவில்லை. அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போதும் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் சிறையிலேயே பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டேன் சுவாமி மரணம்

ஸ்டேன் சுவாமி மரணம்

எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதற்காக கடந்த ஆண்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடிகளிடையே மக்கள் பணி ஆற்றி வந்த 83 வயது திருச்சி பாதிரியார் ஸ்டேன் சுவாமியும் கைது செய்யப்பட்டார். தேசிய புலனாய்வு ஏஜென்சியால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமிக்கு 8 மாதங்களாக ஜாமீன் வழங்கப்படவில்லை. அண்மையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட போதும் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தால் சிறையிலேயே பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அவர் தமது இரங்கல் செய்தியில், பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என தெரிவித்திருந்தார். லோக்சபா எம்.பி. கனிமொழி, போராளிகள் விதைக்கப்படுகிறார்கள் புதைக்கப்படுவதில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

வன்மையான கண்டனம் இல்லையே?

வன்மையான கண்டனம் இல்லையே?

ஆனால் பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசை பிற தலைவர்கள் போல முதல்வர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டிக்கவில்லையே என்கிற ஆதங்கம் சமூக வலைதளங்களில் குவிந்து வருகிறது. @VinciJ6 என்ற நெட்டிசன், இதற்கு காரணமான மோடி அமித்ஷா வை இன்னும் காத்திரமாக கண்டிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் என குறிப்பிட்டுள்ளார். @tamilansathya2 என்ற பதிவர், எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது இல்லை யாரால் கைதுசெய்யப்பட்டார் என்பது இல்லை. மோடி அரசுக்கு கண்டனம் இல்லை. இதுக்கு எதுக்கு இரங்கல் தெரிவிக்கவேண்டும்? என கோபத்துடன் கேள்வி கேட்டுள்ளார்.

இரங்கல் மட்டும்தானா?

இரங்கல் மட்டும்தானா?

@10kalai_ravanan என்பவர், பெரியாரின் வழி வந்தவர்கள் என்று மார்தட்டும் நீங்கள், இவரின் கைது குறித்தும்,இவரின் இந்நிலை குறித்தும் குறிப்பிடாமல் இரங்கல் வாசிப்பதை தமிழ் மக்கள் இரசிக்க மாட்டார்கள்.. இவரின் இந்நிலைக்கு காரணமான பாசிச பிஜேபி க்கு வாக்களித்த அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும் என்கிறார். @Rameshp15680533 என்ற நெட்டிசன், இது வெறும் அறிக்கையாக இல்லாமல் உங்களால் முடிக்க கூடிய நியாயமான முன்னெடுப்பைச் செய்ய வேண்டும். அதுவே உங்கள் அரசு அடிதட்டு மக்களின் அரசாக நீங்கள் அவர்களின் நாயகனாக மாறுவீர்கள். இது தற்போதய நமது நாட்டின் தேவையும் கூட. நன்றி என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+