ஒரே கல்லில் பல மாங்காய்.. மதுரையை திமுக டார்கெட் செய்வது ஏன்? ஸ்டாலின் வியூகம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ள மதுரையை மொத்தமாக திமுக கைப்பற்றும் வகையில் திமுகவின் சமீபத்திய மூவ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதேபோன்று புதிதாக அரசியல் களம் கண்டு இருக்கும் விஜய்யும் மதுரையில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக அண்மையில் பரபரப்பாக பேசப்பட்டதால் அவருக்கும் செக் வைக்கும் வகையில் இப்படி ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கத்தில்தான் தெற்கில் இருந்து தனது தேர்தல் வியூகத்தை திமுக தொடங்கியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.

மதுரையில் நாளை தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். முதல்வர் ஸ்டாலினை வரவேற்க திமுக தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்தனர். தொண்டர்களை பார்த்து முதல்வர் ஸ்டாலின் கையசைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு தனியார் ஹோட்டலுக்கு சென்றார்.

tn-cm-mk-stalin-leads-roadshow-in-madurai-dmk-s-strategy-ahead-of-elections


25 கிமீ ரோடு ஷோ

அங்கு ஓய்வெடுத்த பின்னர் மாலையில் பிரமாண்ட ரோடு-ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாலை 5 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்தினார். சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். வழிநெடுக திரண்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முதல்வர் வேனை விட்டு இறங்கி, சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார். இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஜீவாநகர், சுந்தரராஜபுரம் மார்க்கெட், டி.வி.எஸ். நகர் சுரங்கப்பாதை வழியாக பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், எல்லீஸ்நகர் 70 அடி ரோடு, பை-பாஸ் ரோடு, பொன்மேனி, காளவாசல், குரு தியேட்டர், ஆரப்பாளையம் பஸ் நிலையம், ஜல்லிக்கட்டு ரவுண்டானா, ஆரப்பாளையம் கிராஸ் ரோடு வழியாக மேயர் முத்து சிலை பகுதிக்கு செல்லும் வகையில் ஸ்டாலின் ரோடு ஷோ அமைந்து இருந்தது.

மதுரையில் ஏன்

வரும் 2026 ஏப்ரல் - மே மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு கூட இல்லாத நிலையில், ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகளை தற்போதே வேகப்படுத்தியுள்ளது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தேர்தல் பிரசார யுக்திகளை திமுக வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில்தான், மதுரையில் இன்று ஸ்டாலின் நடத்தும் பிரமாண்ட ரோடு ஷோ முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.

மதுரையை பொறுத்தவரை அதிமுக செல்வாக்காக உள்ள பகுதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மதுரையில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளில் அதிமுக, மற்றும் திமுக தலா 5 தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. 10 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு 2021ல் தேர்தலை எதிர்கொண்ட அதிமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது அந்தக் கட்சிக்கு மதுரை பகுதியில் உள்ள செல்வாக்கை காட்டுவதாக அமைந்து இருந்தது என்பது அரசியல் நோக்கர்களின் வாதமாக இருந்தது.

விஜய்க்கும் செக்?

எனவே அதிமுகவுக்கு கொஞ்சம் செல்வாக்கு உள்ள மதுரையை மொத்தமாக திமுக கைப்பற்றும் நோக்கத்தில்தான் திமுகவின் சமீபத்திய மூவ்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. புதிதாக அரசியல் களம் கண்டு இருக்கும் விஜய்யும் மதுரையில் போட்டியிட திட்டமிட்டு இருப்பதாக அண்மையில் அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேச்சு எழுந்தது.

ஒருவேளை இது உண்மையாக இருந்தாலும் கூட விஜய்க்கு செக் வைக்கும் வகையில் பல யூகங்களை திமுக வகுத்து வருகிறது. இப்படி ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் நோக்கத்தில்தான் தெற்கில் இருந்து தனது தேர்தல் வியூகத்தை திமுக தொடங்கியுள்ளது என்பது அரசியல் விமர்சகர்கள் சொல்லும் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+