“ஃப்ரீ டைம்ல” என்ன பண்ணுவீங்க? அப்பாவிடம் கற்றது என்ன? வெற்றியின் “சீக்ரெட்” - ஸ்டாலினின் மறுபக்கம்
சென்னை: இந்தியா டுடே ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தனிப்பட்ட ஓய்வு நேரம் பற்றியும், வெற்றிக்கான ரகசியம் குறித்தும் பேசி இருக்கிறார்.
சமீபத்தில் இந்தியா டுடே வெளியிட்ட இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அது குறித்து பேட்டி எடுக்கப்பட்டது.
இதில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், திராவிட மாடல், கட்சிப் பணிகள், கருணாநிதியிடம் தான் கற்றுக்கொண்டது என பல விசயங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து இருக்கிறார்.

வெற்றியின் ரகசியம்
கேள்வி: உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
மு.க.ஸ்டாலின்: ரகசியம் ஒன்றும் கிடையாது. மக்களுக்கு விசுவாசமாக இருப்பதாலும், மனசாட்சிப்படி நடந்து கொள்வதுமே என் வெற்றிக் கான காரணங்களாக இருக்கின்றன. மக்கள், இன்றைக்கு நான் இருக்கும் அளவிற்கு என்னை உருவாக்கி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு உண்மையாக இருப்பதோடு அவர்களின் நலனுக் காகவும் உழைத்து வருகிறேன். ஒரு கால கட்டத்தில் மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் தங்கள் பிரச்சினைகளுக்காக தேடி ஓடினர்.

நமக்கு நாமே பயணம்
ஆனால் அந்த நிலை மாறிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, 'நமக்கு நாமே' என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களை நாடிச் சென்றோம். அங்கு அவர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தோம். பின்னர், கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தினை துவக்கி, அதன் மூலம் ஒவ்வொரு தொகுதிக்கும் நேரடியாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தேன். உங்கள் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என்று சொல்லி, அதன்படி இன்று நிறைவேற்றி வருகிறோம்.

ஒன்றிய அரசுதான்
கேள்வி: ஒன்றியம் மற்றும் மாநிலங்களின் உறவுகள் குறித்து உங்களின் கருத்துகள் என்ன?
மு.க.ஸ்டாலின்: 'மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என்பதே எங்களின் அடிப்படையானது; பெரியார், அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டு அதுவே எங்களின் இயக்கத்தின் கொள்கை ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டம் 'ஒன்றிய அரசு' என்று தெளிவாகவே தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிக்க வேண்டும்.

மாநிலங்களை மதிக்க வேண்டும்
மாநிலங்களின் கோரிக்கைகளை செவிமடுத்து கேட்க வேண்டும்; அத்துடன் அவைகளை நிறைவேற்றிட வேண்டும். மாறாக தற்போதைய ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்சொன்ன எதையுமே செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று. மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல், மாநில அரசுகள் தொடர்பான சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றி வருகிறது. இது மாற வேண்டும்.

ஓய்வெடுக்க என்ன செய்வீர்கள்?
கேள்வி: தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி. தாங்கள் ஓய்வு எடுக்க என்ன செய்வீர்கள்?
மு.க.ஸ்டாலின்: இரண்டு மிகப் பெரிய பொறுப்புகளை தோள்களில் சுமந்து வருகிறேன். ஒன்று தமிழக முதல் அமைச்சர். இரண்டாவது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர். நான் வழக்கமாக ஓய்வெடுப்பது என்பது நடைபயணம் மேற்கொள்வதுதான். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா செய்வேன். என் நண்பர்களும் கட்சித் தொண்டர்களும் தரும் புத்தகங்களை படிப்பேன். அத்துடன் தற்போதைய நிலவரம் தொடர்பாக மக்களின் கருத்துக்களை சமூக வலைதளங்களின் மூலம் பார்த்து தெரிந்து கொள்வேன்.

கருணாநிதிபோல் உழைக்கிறேன்
கேள்வி: ஏறத்தாழ 20 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த தங்களின் தந்தையிடம் தாங்கள் கற்ற ஒன்று என்ன?
மு.க.ஸ்டாலின்: வேலை, வேலை, வேலை என அவர் எப்போதும் வேலை செய்து கொண்டிருப்பதையே விரும்புவார். அவர்தான் எனக்கு கடுமையாக உழைக்க வேண் டும் என்று கற்றுத் தந்தார். அவரைப் போல் நானும் கடுமையாக உழைக்க முடிவு செய்துள்ளேன்." என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
"மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வருது".. லோக்சபா தொகுதி 816 ஆக அதிகரிக்க மத்திய அரசு தீவிரம்.. பிளான் ரெடி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications