“சினிமா விமர்சனம்” சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின் .. “இரவின் நிழல்” படத்துக்கு ரைமிங்கில் பஞ்ச்
சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம் என பாராட்டி இருக்கிறார்.
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஆர்தர் வில்சன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், பிரிகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.

சிங்கிள் ஷாட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பார்த்து திரையுலகினர், ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர். ஒத்த செருப்பு திரைப்படத்தில் தனி ஒருவராக நடித்து அசத்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த பார்த்திபன் இந்த படத்தை எந்த வெட்டும் இல்லாமல் இயக்கியுள்ளார்.

சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் பல தோன்றினாலும், நான் லீனியர் வகையில் இயக்கப்படும் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இது என்று பார்த்திபன் விளம்பரம் செய்து வருகிறார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவின் நிழல் திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபனுடன் அமர்ந்து பார்த்து உள்ளார்.சிங்கிள் சாட்டில் நான் லீனர் வகையில் தயாரான இப்படத்தை வியந்து பார்த்த அவர், அதன் பின்னர் பார்த்திபனை புகழ்ந்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "எதிலும் தனிப்பாணி - அதுதான் பார்த்திபன்! ஒத்த செருப்புக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்! இரவின் நிழல் படத்தின் தொழில்நுட்பத் திறன், தமிழ்த் திரையுலகின் தொழில்நுட்பத் திறனின் உயரம்! நான் லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என காட்டியுள்ள அவருக்கு வாழ்த்துகள்!" என்று குறிவ்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications