கண்ணுக்கு குளிர்ச்சியா..வேளாண் திருவிழாவை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்! ஃபுட் பெஸ்டிவலும் இருக்கே
சென்னை: நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை இன்று தொடங்கி அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் நடைபெறுகிறது. சென்னை நந்தப்பாக்கத்தில் அமைந்து இருக்கும் வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த வேளாண் வணிக திருவிழா மற்றும் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உள்ளார்.

காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த வேளாண் வணிக திருவிழா 100 க்கும் அதிகமான அரங்குகள் இடம்பெற்று உள்ளன. இந்த திருவிழாவுடன் சேர்த்து பாரம்பரிய மற்றும் சிறுதானிய உணவகங்கள் கலந்துகொள்ள இருக்கும் உணவு திருவிழாவும் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் நூற்றுக்கும் அதிகமான உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்கிறார்கள். அதேபோல் உணவு பொருட்களை பதப்படுத்துவதற்கான இயந்திரங்களும், மதிப்புக்கூட்டும் இயந்திரங்களும் இதில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

வேளாண் துறை வல்லுநர்கள் கலந்துகொள்ள உள்ள கருத்தரங்குகள், உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்முதல் செய்பவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கும் இந்த திருவிழாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் முக்கிய நிகழ்வாக ஏற்றுமதியில் சிறந்து விளங்கக்கூடிய விவசாயிகளுக்கும், சிறந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications