7 அடுக்கு கட்டிடம்.. மயிலாடுதுறையில் புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மயிலாடுதுறையில் ரூ.114 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தையும் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 700 படுக்கைகளுடன் கட்டப்பட்டுள்ள நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114.48 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இந்த நிலையில், புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை 10 மணிக்கு திறந்து வைத்தார். அப்ப்போது அமைச்சர் எவ வேலு முதல்வர் ஸ்டாலினுக்கு புத்தகங்களை கொடுத்து வரவேற்றனர்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து ரயில் மூலம் புறப்பட்ட முதல்வர் மு.க ஸ்டாலினை திமுகவினர் வழியனுப்பி வைத்தனர். நேற்று இரவு 8.45 மணியளவில் சீர்காழிக்கு முதல்வர் சென்றார். அங்கு அவருக்கு அதிகாரிகள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் தான் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் திருவெண்காட்டில் இருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து ஏராளமான மக்கள் நல திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் 700 படுக்கைகளுடன் ரூ 254 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை, மயிலாடுதுறையில் 3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு, திருவாரூர் மாவட்டத்தில் 4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகள், நாகூர் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனை கட்டமைப்பு, குற்றாலம் பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்புகளையும் முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அளிக்கிறார். இதன்பின்னர் இன்று மதியம் 1 மணிக்கு திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் மாலை 6.15 மணிக்கு சென்னை வந்தடைகிறார். முதல்வர் முக ஸ்டாலின் வருகையை ஒட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications