“அய்யா ராமதாஸ் விரைந்து நலம்பெறனும்..” கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் தெரியத் தொடங்கி உள்ளது. கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் நடைபெற்று வந்த பயிலரங்கங்கள், ஆய்வுக் கூட்டங்கள், பயிற்சி வகுப்புகளில் ராமதாஸ் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ட்விட்டரில் அறிவித்த ராமதாஸ் அனைத்து நிகழ்வுகளையும் ஒத்திவைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அதில், "கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்." என்று அறிவித்து உள்ளார்.
நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று ட்விட்டரில் பதிவிட்ட அவர் "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்." என்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விரைந்து நலம்பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அய்யா ராமதாஸ் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications