எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான்.. “மகளிர் உதவித்தொகை” களப்பணியாளர்களை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்த அனைவரையும் பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்து, அதன் அடையாளமாக பயனாளிகளுக்கு அவர் ஏடிஎம் கார்டையும் வழங்கினார்.

TN CM Stalin thanks to government employees and volunteers for kalaignar magalir urimai thittam

முதல்வர் ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததும், இந்த மாதத்துக்கான உரிமைத் தொகை தகுதியான அனைத்து குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கும் சென்றுள்ளது. அதாவது பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்ட 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 பணம் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 15ஆம் தேதி உரிமைத் தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்காக பணியாற்றிய ஊழியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் (X) வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளைக் கண்டறிவதற்கு அயராது உழைத்திட்ட அனைவரையும் இத்தருணத்தில் பாராட்டி மகிழ்கிறேன்.

TN CM Stalin thanks to government employees and volunteers for kalaignar magalir urimai thittam

இத்திட்டத்தில் களப்பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், நியாய விலைக் கடைப் பணியாளர்கள், நகராட்சி - மாநகராட்சிப் பணியாளர்கள், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்களையும் இத்திட்ட நிகழ்வின் வெற்றியில் பாராட்டி மகிழ்கிறேன். களப்பணியாளர்களை வழிநடத்திய மாவட்ட ஆட்சியர்கள், அரசு செயலாளர்கள், தலைமைச் செயலாளர்கள் வரை உள்ள அனைத்து உயர் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+