சர்ப்ரைஸ் விசிட்..புதிய கலெக்டர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்! இதுதான் பிளான்! செமயா இருக்கே!
சென்னை: நேற்று தமிழகத்தில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், திடீர் ஆய்வு நடத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்ட. திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திருவாரூர் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்ட திட்ட அலுவலரான சதீஷ் தர்மபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய இயக்குனர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறப்பு திட்ட செயலாக்க துறை துணை செயலாளர் பிரதாப் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களான திரு. ஆர். சதீஷ் (தருமபுரி), திரு. எஸ். சரவணன் (திண்டுக்கல்), திரு. எம். பிரதாப் (திருவள்ளூர்), திரு. சி. தினேஷ் குமார் (கிருஷ்ணகிரி), திரு. எஸ். சேக் அப்துல் ரகுமான் (விழுப்புரம்), திரு.கே. தர்பகராஜ் (திருவண்ணாமலை), திரு.வி. மோகனசந்திரன் (திருப்பத்தூர்), டாக்டர் ஆர். சுகுமார் (திருநெல்வேலி), திருமதி கே. சிவசவுந்தரவள்ளி (திருவாரூர்) ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது அவர்களிடையே உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,” இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் களத்தில் இருக்கப் போகும் நீங்கள், அரசின் முத்திரை திட்டங்கள், அன்றாடம் செயல்படுத்தும் திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள், இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அரசு அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
மேலும், மக்கள் குறை தீர்ப்பு முகாம் மனுக்கள் மீதும், முதல்வரின் முகவரி மனுக்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி, தீர்வு காணப்பட வேண்டும். அரசு அலுவலகங்களுக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொண்டு, அவர்களின் குறைகளை அங்கேயே தீர்த்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும்
ஒவ்வொரு மாவட்டமாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்போது, அங்கு மக்களை சந்திக்கின்றபோது, அவர்கள் எங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறந்த மாவட்ட ஆட்சித் தன தலைவர் என்று பாராட்டும்படியாக பணியாற்ற வேண்டும். மக்களின் பாராட்டைப் பெற்ற முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகளை நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை கவனமாக கண்காணித்து திட்டங்கள் தகுதியுள்ள ஒவ்வொருவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு. மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்ற இருக்கும் அனைவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications