அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட முதல்வர்! சுட சுட தயாரான அந்த ரிப்போர்ட்! துபாய் பயணம் முடிந்ததும் 3 கச்சேரி
சென்னை: துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் முதல்வர் ஸ்டாலின் திரும்பி இந்தியா வந்ததும் 3 முக்கியமான கூட்டங்களை நடத்த உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் அறிவாலய வட்டாரங்கள் பரபரப்பாக காணப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி.. பட்ஜெட் குறித்த பாசிட்டிவ் ரிப்போர்ட் உள்ளிட்ட காரணங்களால் முதல்வர் ஸ்டாலின் தரப்பு குஷியில் இருக்கிறதாம். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் வரும் மார்ச் 24ம் தேதி துபாய்க்கு செல்கிறார்.
இந்த பயணத்திற்கு பின்பாக பல்வேறு முக்கியமான சந்திப்புகளை முதல்வர் ஸ்டாலின் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

மீட்டிங்
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச எக்ஸ்போவில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் உள்ளார். அங்கு இவருக்கு 'நம்மில் ஒருவர்' என்ற பாராட்டு விழாவை நடத்த வெளிநாடு வாழ் தமிழர் இந்தியச் சங்கம் திட்டமிட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வரை துபாயில் முதல்வர் ஸ்டாலின் இருப்பார். அங்கு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், பல்வேறு முதலீட்டாளர்களையும் சந்திக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு கூடுதல் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என்கிறார்கள்.

கச்சேரி 1
இந்த துபாய் பயணம் முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக டெல்லி வருகிறார். பின்னர் திமுக கட்சி அலுவலகம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து முதல் முக்கியமான மீட்டிங்கில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இது எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகும். டெல்லியில் நடக்கும் இந்த கூட்டம் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேசிஆர்
இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, கேசிஆர் ஆகிய மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். முடிந்த அளவுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலை இந்த கூட்டத்திற்கு வரவைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியையும், பாஜக அல்லாத மாநில கட்சிகளையும் ஒரு குடைக்குள் கொண்டு வரும் வகையிலும், 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும் இந்த கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்த இருக்கிறார் என்கிறார்கள்.

கச்சேரி 2
இதன்பின் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சந்திப்பில் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கும். ஆனால் எப்போது நடக்கும் என்ற விவரம் வெளியாகவில்லை, இந்த சந்திப்பிற்காக தமிழ்நாடு அரசு தரப்பில் முக்கிய ரிப்போர்ட் ஒன்றும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி, எய்ம்ஸ் பணிகள் நடக்காமல் இருப்பது, மேகதாது பிரச்சனை உள்ளிட்ட விஷயங்களை பற்றிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய ரிப்போர்ட் அது. அதோடு ஆளுநர் ஆர். என் ரவி பற்றியும், அவரின் சமீபத்திய பேச்சுக்கள், நீட் மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேச இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

கச்சேரி 3
இந்த இரண்டு முக்கிய மீட்டிங்குகளுக்கு பிறகு தமிழ்நாடு வரும் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிலும் முக்கிய மீட்டிங்கை நடத்த உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் அமைச்சரவை மாற்றம் குறித்த ஆலோசனைகள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் உட்பட பல புதிய எம்எல்ஏக்களை அமைச்சரவையில் சேர்க்கும் வகையிலும், ஒரு சில அமைச்சர்களின் இலக்காக்களை குறைக்கும் வகையிலும் இதில் முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ரேடாரில் இருக்கும் மூத்த அமைச்சர் ஒருவருக்கு செக் வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வருகின்றன.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications