விஜய்யின் வெளிநாடு பயணம் தாமதம்? ஆளுநரிடம் இருந்து வந்த போன் கால்..பிளானை மாற்றும் முதல்வர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் விஜய் வரும் 10 ஆம் தேதி லண்டன் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில், அவரது வெளிநாடு பயணம் தாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய பிரதமர் சென்னை வர உள்ள நிலையில், தமிழக ஆளுநர் அர்லேகர் வைத்த கோரிக்கையை ஏற்று விஜய் முடிவுக்கு வந்து இருப்பதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் வரும் 10 ஆம் தேதி லண்டன் செல்ல திட்டமிட்டு இருந்தார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 16 வரை பிரிட்டன் பயணத்தில் இருப்பார் எனவும் தகவல் வெளியானது. முதல்வர் விஜய்யுடன் உயர் மட்ட அதிகாரிகள் குழுவும் பிரிட்டன் பயணம் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது.

CM Vijay foreign trip London industrial investment Britain

முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணத்தை உறுதி செய்யும் விதமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கும் விஜய் நேரில் சென்று இருந்தார். தூதரக பாஸ்போர்ட் பெறுவதற்காக விஜய் சென்று இருந்தார். இந்த நிலையில், முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் தாமதம் ஆகலாம் என தற்போது புதிய வெளியாகியுள்ளது. இது குறித்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆளுநர் அர்லேகர்

வரும் 11 மற்றும் 13 ஆம் தேதி வரை டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இதில் பங்கேற்க இந்தியா வருகை தரும் மலேசிய பிரதமர் முகம்மது அன்வர், தமிழக முதல்வர் விஜய்யை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறாராம். இதற்காக முகம்மது அன்வர் சென்னை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் முதல்வர் விஜய் வெளிநாடு பயணம் செல்ல இருப்பதால், இந்த சந்திப்பு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அந்த நேரத்தில்தான் ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெளிநாடு பயணத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காகவே சென்னை வர மலேசிய பிரதமர் திட்டமிட்டு இருக்கக் கூடிய நிலையில், இந்த சந்திப்பை தவிர்க்க வேண்டாம் எனவும் வெளிநாடு பயணத்தை தள்ளிவைக்குமாறு ஆளுநர் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இடைத்தேர்தல் வருவதால்

இதனை ஏற்று விஜய்யின் வெளிநாடு பயணம் தள்ளிப்போகலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் இந்த குறிப்பிட்ட தேதியில் அமையாவிட்டால், அதற்கு பிறகு இடைத்தேர்தல் உள்ளிட்டவை இருப்பதால் விஜய்யின் வெளிநாடு பயணம் சில வாரங்களுக்கு தள்ளிப்போகலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசப்படும் தகவலாக உள்ளது.

மலேசிய பிரதமர் வரும் 13 ஆம் தேதி சென்னையில் தங்க திட்டமிட்டுள்ளதாகவும், சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+